Published : 18 Mar 2020 11:12 AM
Last Updated : 18 Mar 2020 11:12 AM
நாவல் கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலினால் ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் ஒப்பந்தங்களைக் கூட துறக்க வாய்ப்பிருப்பதாக ஆஸி. ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன் பிறகும் நடக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இது தொடர்பாக வீரர்களுக்கு எதுவும் அறிவுறுத்தவில்லை என்றாலும் அதன் தலைமைச் செயலதிகாரி கெவின் ராபர்ட்ஸ் கூறும்போது வீரர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்கள் எனவே இது தனிப்பட்ட வீரர்களின் முடிவைப் பொறுத்தது என்றார்.
”நாங்கள் சின்ன அறிவுரைதான் வழங்க முடியும் முடிவு வீரர்களுடையதுதான். மேலும் பிசிசிஐ மற்றும் அதன் ஐபிஎல் பிரிவுகளிலிருந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே நிச்சயமற்ற இந்தச் சூழலில் வீரர்கள் சாத்தியமாகக் கூடிய நல்ல முடிவை எடுப்பார்கள் என்று கருதுகிறேன்” என்றார் கெவின் ராபர்ட்ஸ்.
ஆனால் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா வீரர்களை ஐபிஎல் அல்லது யுகேயின் ஹண்ட்ரட்ஸ் தொடருக்கு அனுமதிப்படது குறித்து மறு பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் பல்வேறு அணிகளில் மொத்தம் 17 ஆஸ்திரேலிய வீரர்கள் ஒப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிக தொகைக்கு ஒப்பந்திக்கப்பட்ட பாட் கமின்ஸ், உட்பட ஸ்டீவ் ஸ்மித், வார்னர், மேக்ஸ்வெல் ஆகியோர் தங்கள் பணம் கொழிக்கும் ஒப்பந்தங்களை கைவிட வாய்ப்புள்ளதகா அந்த ஊடகம் எழுதியுள்ளது.
ஐபில் கிரிக்கெட் வரலாற்றிலேயே 3.2 மில்லியன் டாலர்கள் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரே வீரர் கமின்ஸ்தான், இவரை கேகேஆர் ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT