Published : 17 Mar 2020 12:37 PM
Last Updated : 17 Mar 2020 12:37 PM
ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா (21) கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு உடலின் நோய் எதிர்ப்புச் சக்திகள் குறைவாக இருக்குமென்பதால் கரோனா ரிஸ்க் அதிகம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் 21 வயது இளம் கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான பிரான்சிஸ்கோ கார்சியா மரணமடைந்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கு லுகேமியா இருந்ததால் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
தீவிர கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் அவர் மலாகாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மலாகாவில் உள்ள கால்பந்து கிளப்பான அத்லெடிகோ போர்ட்டாடா அல்டா என்ற கிளப்பின் இளம் வீரர்களுக்கான பயிற்சியாளராக அவர் இருந்து வந்தார். 21 வயதில் இவர் பலியாகியிருப்பது ஸ்பெயினில் இளம் வயதில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையை 5 ஆக அதிகரித்துள்ளது.
ஆனால் பிற்பாடு இவருக்கு மருத்துவ சோதனையில் லுகேமியா என்ற ஒரு வகை கேன்சர் நோய் இருப்பது தெரியவந்துள்ளது, இதனால் கரோனா இவரை மரணத்துக்கு இட்டுச் சென்றுள்ளது என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT