Published : 14 Mar 2020 03:24 PM
Last Updated : 14 Mar 2020 03:24 PM
கரோனா வைரஸ் எனும் கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் இன்று 8 அண் உரிமையாளர்களிடம் பிசிசிஐ பேச்சி வார்த்தைகள் நடத்தியது.
ஆனால் கூட்டத்தில் என்ன முடிவு எட்டப்பட்டது என்பது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும் போட்டிகள் எண்ணிக்கையைக் குறைப்பது உட்பட 7 யோசனைகள் பரிசீலிக்கப்பட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி கூறுகிறது.
“ஆறு முதல் 7 யோசனைகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. இதில் போட்டிகளைக் குறைப்பதும் அடங்கும்” என்று பெய ர்குற விரும்பாத பிசிசிஐ தரப்பு ஒன்று கூட்டத்திற்கு பிறகு பிடிஐ-யிடம் தெரிவித்தது.
இந்தியாவில் கரோனா வைரஸுக்கு 2 பேர் பலியாக 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்லனர். இதனையடுத்து அதிகம் பேர் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இந்தக் கூட்டத்தில் ஐபிஎல் தொடரை வெளிநாட்டுக்கு மாற்றுவது பற்றி விவாதிக்கப்படவேயில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் கோவிட்-19 வைரஸுக்கு 5,000த்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் சக உரிமையாளர் நெஸ் வாடியா கூறும்போது, “பிசிசிஐ, ஐபிஎல், அதிகாரபூர்வ ஒளிபரப்பாளர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆகியவை பண நஷ்டம் குறித்து நிச்சயமாக யோசிக்கவில்லை, பாதுகாப்பு பற்றியே பரிசீலித்தோம்” என்றார்.
விவாதத்தின் போது தொடரை மே 31ம் தேதி வரை நீட்டிப்பதும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூன் முதல்வாரம் வரை தொடர் நீட்டிக்கப்பட்டால் அதற்கு அயல்நாட்டுக் கிரிக்கெட் வாரியங்களின் ஒப்புதல் தேவைப்படும்.
ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு இது தொடர்பாக இன்று மேலும் விவாதிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT