Last Updated : 14 Mar, 2020 11:46 AM

 

Published : 14 Mar 2020 11:46 AM
Last Updated : 14 Mar 2020 11:46 AM

கரோனா அச்சுறுத்தல்: நியூஸி-ஆஸி. ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு: 14 நாட்கள் தனிமைப்பட நேரிடுவதால் 'கிவிஸ்' வீரர்கள் அவசரம்

ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச், நியூஸி கேப்டன் கானே வில்லியம்ஸன் : கோப்புப்படம்

சிட்னி

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சேப்பல் ஹாட்லி ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டி நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த 2 போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாளை நள்ளிரவு முதல் ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்புதான் அனுமதிக்கப்படுவார்கள் என்று நியூஸிலாந்து அரசு அறிவித்துள்ளது. இதனால் நியூஸிலாந்து வீரர்கள் அவசரமாகத் தாயகம் திரும்புகின்றனர்

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் செய்து வருகின்றன. குறிப்பாக மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களைத் தவிர்த்து வருகின்றனர்.

இதன் காரணமாக, நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ரசிகர்கள் இன்றி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சிட்னியில் நடந்த முதல் ஆட்டம் ரசிகர்கள் இன்றி நேற்று நடத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் அடுதுத்த இரு போட்டிகள் நடக்க இருந்த நிலையில், அந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது

இதுகுறித்து நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் விடுத்த அறிவிப்பில், " ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மீதமுள்ள இரு போட்டிகள் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது அந்த போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

நியூஸிலாந்து அரசு எல்லைக் கட்டுப்பாடுகளை விதிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மக்கள் அனைவரும் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

அதன்பின்புதான் நியூஸிலாந்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆதலால், ஒருநாள் தாமதமாகச் சென்றாலும் நியூஸிலாந்து வீரர்கள் கூட 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டியது இருக்கும் என்பதால், அவர்கள் உடனடியாகத் தாயகம் திரும்புகின்றனர்.

மேலும், இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணி பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆக்லாந்து, கிறைஸ்ட்சர்ச், டுனாடின் ஆகிய நகரங்களில் 24,27, 29 ஆகிய தேதிகளில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் விளையாட ஆஸ்திரேலிய அணி வந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்புதான் நியூஸிலாந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த சூழலில் இந்த டி20 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் எதிர்காலத்தில் கலந்து பேசி போட்டித் தொடர் குறித்து முடிவு செய்யும்.

இவ்வாறு நியூஸிலாந்து வாரியம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x