Published : 10 Mar 2020 10:41 AM
Last Updated : 10 Mar 2020 10:41 AM

முதலிடத்தை இழந்தார் ஷஃபாலி வர்மா

துபாய்

மகளிருக்கான டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இறுதிப் போட்டியில் 2 ரன்கள் மட்டுமே சேர்த்த இந்திய வீராங்கனையான ஷஃபாலி வர்மா 744 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். லீக் சுற்றின் முடிவில் ஷஃபாலி வர்மா முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனையான பெத் மூனி 762 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். இறுதிப் போட்டியில் அவர், 78 ரன்கள் விளாசியிருந்தார்.

உலகக் கோப்பை தொடரில் பெத் மூனி 6 ஆட்டங்களில் சராசரி 64 உடன் 259 ரன்கள் குவித்திருந்தார். தொடர் நாயகியாக தேர்வான பெத் மூனி, ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடிப்பது இதுவே முதன்முறை.

இறுதி போட்டியில் 39 பந்துகளில் 75 ரன்கள் விளாசிய அலிசா ஹீலி 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ்9-வது இடத்தில் தொடர்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x