Published : 08 Mar 2020 11:40 AM
Last Updated : 08 Mar 2020 11:40 AM

ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: கால் இறுதி சுற்றில் அமித் பங்கால்

ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் மங்கோலிய வீரர் கார்குவுக்கு எதிராக விளையாடிய இந்தியாவின் அமித் பங்கால் (வலது).

அமான்

ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அமித் பங்கால் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஜோர்டான் நாட்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் 2-வது சுற்றில் மங்கோலியாவின் கார்குவை எதிர்கொண்டார். இதில் அமித் பங்கால் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தத் தொடரில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும் 10-வது இந்தியர் அமித் பங்கால் ஆவார்.

இதுவரை 6 இந்திய வீரர்களும், 4 இந்திய வீராங்கனைகளும் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமித் பங்கால் கால் இறுதி சுற்றில் தெற்காசிய விளையாட்டு சாம்பியனான பிலிப்பைன்ஸின் கால்லோவுடன் மோதுகிறார். இதில் அமித் பங்கால் வெற்றி பெறும் பட்சத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்.

57 கிலோ எடைப் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கவுரவ் சோலங்கி, உலக சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் மிராசிஸ்பெக் மிர்சாகலிலோவை எதிர்த்து விளையாடினார். இதில் கவுரவ் சோலங்கி 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x