Published : 03 Mar 2020 06:12 PM
Last Updated : 03 Mar 2020 06:12 PM
பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் சமீபத்தில் சூதாட்டத் தொடர்புக்காக தடை செய்யப்பட்டார், முன்னதாக பயிற்றுனர் முன்னிலையில் ஆடைகளைக்கடந்து எனக்கு எங்கே கொழுப்பு உள்ளது காட்டுங்கள் என்று கேட்டார். இதனையடுத்து முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டட் அவருக்குக் கடுமையான வார்த்தைகளில் அறிவுரை வழங்கியுள்ளார்.
யூடியூப் வீடியோ ஒன்றில் மியாண்டட் பேசியதாவது:
உமர் அக்மல் உன் மாமனார் (அப்துல் காதிர்) மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். அவர் சார்பாக உங்களை எச்சரிக்கிறேன் உங்கள் நடத்தை வழிமுறைகளைச் சரி செய்யுங்கள். இல்லையெனில் காதிருக்காக உங்களை பொறுப்பாக்க நேரிடும்.
உமர் அக்மலின் பெற்றோர் தங்கள் மகனைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
கிரிக்கெட்டில் ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கும் நீங்கள் அவ்வப்போது மலிவான கோணங்கித் தன சேட்டைகளில் ஈடுபட்டு வருகிறீர்கள். இது முறையல்ல, பாகிஸ்தானுக்கும், கிரிக்கெட்டுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் அவப்பெயரை தேடித்தருகிறீர்கள்.
அனைவரும் உங்களை திட்டுகின்றனர், நீங்களும் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கைக்கு தீங்கு ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்.
கிரிக்கெட் உங்களுக்கு பணம் மட்டுமல்ல, மரியாதையையும் கொடுக்கிறது. நாங்கள் கிரிக்கெட்டை விட்டு வந்து விட்டோம் ஆனாலும் மக்கள் எங்களை மதிக்கிறார்கள். எனவே உங்கள் நடத்தையை சீர்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வாறு மியாண்டட் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT