Last Updated : 03 Mar, 2020 03:51 PM

 

Published : 03 Mar 2020 03:51 PM
Last Updated : 03 Mar 2020 03:51 PM

நியூஸி. தொடரில் தோற்றாலும் தரவரிசையில் அசைக்க முடியா இடத்தில் இந்தியா, விராட் கோலி

நியூஸிலாந்து தொடர் 2-0 ஒயிட்வாஷ் என்று இந்தியத் தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை 116 புள்ளிகளூடன் தக்க வைத்துள்ளது.

பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி நியூஸிலாந்துக்கு எதிராக மொத்தம் 38 ரன்களுடன் 9.50 என்ற சராசரியில் முடிந்தாலும் ஸ்மித்துக்கு அடுத்த இடத்தில் 2ம் இடத்தைத் தக்கவைத்துள்ளார். இவர் 886 புள்ளிகள் பெற்றுள்ளார், ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க, லபுஷேன் 827 புள்ளிகளுடன் 3ம் இடம் பிடிக்க கேன் வில்லியம்சன் 813 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் இருக்கிறார், பாகிஸ்தானின் பாபர் ஆஸம் 800 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் இருக்கிறார். டேவிட் வார்னர் 6, செடேஷ்வர் புஜாரா 7, ஜோ ரூட் 8, ரஹானே 9, பென் ஸ்டோக்ஸ் 10ம் இடங்களில் உள்ளனர்.

நியூஸிலாந்து அணி 110 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் ஆஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன. இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் தோல்விகளைச் சந்தித்தது. இங்கிலாந்து 105 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 98 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் 6ம் இடத்தில் இலங்கையும், 7ம் இடத்தில் பாகிஸ்தானும் 8ம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் 9ம் இடத்தில் வங்கதேசமும், 10-ம் இடத்தில் இலங்கை அணியும் உள்ளன.

மற்றபடி டாம் பிளெண்டல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 117 ரன்களை எடுத்ததன் மூலம் 27 இடங்கள் முன்னேறி 46ம் இடத்துக்கும் இந்தியாவின் பிரித்வி ஷா 17 இடங்கள் முன்னேறி 76வது இடத்துக்கும் வந்துள்ளனர்.

பவுலிங் தரவரிசையில் ஆஸி.யின் பாட் கமின்ஸ் 904 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்க நீல் வாக்னர் 2ம் இடத்தில் இருக்கிறார். இந்திய அணியில் பும்ரா மட்டுமே பவுலிங் தரவரிசையில் டாப் 10-ல் 7ம் இடத்தில் இருக்கிறார்.

இந்தியாவின் மயங்க் அகர்வால் டாப் 10-லிருந்து வெளியேறியுள்ளார். பவுலிங் தரவரிசையில் டிம் சவுத்தி 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரபாடா 5ம் இடத்திலும் ட்ரெண்ட் போல்ட் 9ம் இடத்திலும் உள்ளனர்.

பவுலிங் தரவரிசையிலும் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையிலும் நியூஸிலாந்து புதுமுக வீரர் கைல் ஜேமிசன் பெரிய முன்னேற்றம் கண்டார். பவுலிங்கில் அவர் 80ம் இடத்திலிருந்து 43ம் இடத்துக்கு முன்னேற, ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் கைல் ஜேமிசன் 26 இடங்கள் முன்னேறி 22-ம் இடம் பிடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x