Published : 02 Mar 2020 09:13 PM
Last Updated : 02 Mar 2020 09:13 PM
தோனி, தோனி என்ற ரசிகர்களின் பலத்த வரவேற்பு, கரகோஷத்துக்கு இடையே சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே அணியினர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அதிலும் தோனி காலில் பேட் கட்டிக்கொண்டு, முதல் ஷாட்டை அடித்தபோது மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மட்டுமே இருந்தாலும், விசில் அடித்து, கரகோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி தோல்விக்குப்பின் கிரிக்கெட் களத்துக்கு வராமல் தவிர்த்த தோனியை மைதானத்தில் வலைப்பயிற்சியில் பார்த்தவுடன் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் அடைந்த தோல்விக்குப்பின் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதை தோனி தவிர்த்து வந்தார்.
அதன்பின் நடந்த மே.இ.தீவுகள் தொடர், தென் ஆப்பிரிக்கத் தொடர், வங்கதேசம், ஆஸ்திரேலியத் தொடர் அனைத்திலும் தோனி பங்கேற்கவில்லை. இதனால், பிசிசிஐ அமைப்பின் மத்திய ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து தோனி நீக்கப்பட்டார்.
இதற்கிடையே ஐபிஎல் போட்டியில் தோனியின் செயல்பாடு, விளையாட்டைப் பொறுத்துதான் அவர் டி20 உலகக்கோப்பைக்கான அணியில்இடம் பெறுவது உறுதியாகும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆதலால், தோனியின் ஆட்டம் ஐபிஎல் போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தோனி இந்திய அணிக்குள் மீண்டும் வருவது இந்திய அணிக்கு பலமாகவும், எதிரணிகளுக்கு பயமாகவும் இருக்கும்.
இம்மாதம் 29-ம் தேதி 13-வது ஐபிஎல் டி20 போட்டி தொடங்குவதால், அதற்கான முதல்கட்ட பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஈடுபட்டுள்ளது. இந்த பயிற்சியில் ஈடுபடுவதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி நேற்று சென்னை வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த முதல்கட்ட பயிற்சியில் தோனியுடன் சேர்ந்து பியூஷ் சாவ்லா, அம்பதி ராயுடு, முரளி விஜய், கரன் சர்மா, உள்ளூர் வீரர்கள் சாய் கிஷோர், ஜெகதீசன் ஆகியோர் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
A grand waltz to take guard! #StartTheWhistles #SuperTraining
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT