Published : 27 Feb 2020 02:38 PM
Last Updated : 27 Feb 2020 02:38 PM
வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முதல் இன்னிங்சில் கைல் ஜேமிசன் காரணம் என்றால் இரண்டாவது இன்னிங்சில் புதிய பந்தில் வீசும் தொடக்க ஜோடியான ட்ரெண்ட் போல்ட், சவுத்தியின் பந்து வீச்சே காரணம்.
இருவரும் சேர்ந்து 206 ரன்களுக்கு 14 இந்திய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இருவரும் சேர்ந்து 54 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளனர், இதில் போல்ட் 227 விக்கெட்டுகளையும் சவுத்தி 220 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனர். இருவரும் சேர்ந்து மொத்தம் 426 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர், இது ஜோடி சேர்ந்து வீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோடிகளின் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் கூட்டணியும் 2வது இடத்தில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஜோடியும் உள்ளன.
முன்பு மூன்றாவது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸின் கர்ட்லி ஆம்புரோஸ், கார்ட்னி வால்ஷ் ஆகியோரது 412 விக்கெட்டுகள் சாதனையை போல்ட், சவுத்தி முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
புதிய பந்தில் இணைந்து வீசும் ஜோடிகளின் விக்கெட்டுகள் வருமாறு:
ஆண்டர்சன் - பிராட் ஜோடி மொத்தம் 714 விக்கெட்டுகள் இதில் ஆண்டர்சன் 381 விக், பிராட் 313 விக்கெட்டுகள்
வாசிம் அக்ரம் - வக்கார் யூனிஸ் 476 விக்கெட்டுகள் இதில் வாசிம் அக்ரம், வக்கார் இருவருமே சமமாக 238 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சவுத்தி - போல்ட் மொத்தம் 426 விக்கெட்டுகள், இதில் போல்ட் 214, சவுத்தி 212.
வால்ஷ்-ஆம்புரோஸ் மொத்தம் 412 விக்கெட்டுகள் இதில் ஆம்ப்ரோஸ் 186, வால்ஷ் 226
மெக்ரா -கில்லஸ்பி மொத்தம் 362 விக்கெட்டுகள் மெக்ரா 192, கில்லஸ்பி 170
ஆலன் டோனல்ட் - ஷான் போலக் 346 விக்கெட்டுகள் இதில் டோனால்ட் 185, போலாக் 161
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT