Published : 24 Feb 2020 10:00 AM
Last Updated : 24 Feb 2020 10:00 AM
`ஹீரோ ஐ லீக்’ கால்பந்துப் போட் டித் தொடரில், கோவையில் நேற்று சென்னை சிட்டி எஃப்.சி(சிசிஎஃப்சி). அணியும், ஐஸ் வால் எஃப்.சி. அணியும் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந் தது.
கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை இந்த ஆட்டம் நடைபெற்றது.
இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன. இதை யடுத்து ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
இப்போட்டியின் 9-வது நிமிடத் தில் சிசிஎஃப்சி-யின் ரோஹித் மிஸ்ரா எடுத்துக் கொடுந்த பந்தை கோலாக மாற்றத் தவறினார் என்.விஜய். ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் சையத் சுஹைல் எடுத்துக் கொடுத்த பந்தை, தலையால் தட்டி கோல் போட்டார் சிசிஎஃப்சி வீரர் கட்சுமி யூசா. 45-வது நிமிடத்தில் சிசிஎஃப்சி கோல் கம்பத்தை நோக்கி வந்த பந்தைப் பிரமாதமாக தடுத்தார் கோல்கீப்பர் நௌசத் கார்சியா.
ஆட்ட இடைவேளையின்போது 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது சென்னை சிட்டி எஃப்.சி.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் ஆவேசமாக மோதின. 52-வது நிமிடத்தில் ஐஸ்வால் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதைப் பயன்படுத்தி கோல் போட்டார் ஐஸ்வால் அணியின் வீரர் ரொச்சர் ஜீலா. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது.
பின்னர் இரு அணிகளுமே தங் களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்றத் தவறின. கூடுத லாக 4 நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட போதிலும் இரு அணியும் கோல் போடவில்லை. இதையடுத்து 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவானது. சென்னை சிட்டி எஃப்.சி. அணிக்கு ஒரு கோல் பெற்றுத் தந்த கட்சுமி யூசா, ஆட்ட நாயக னாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கோவை நேரு விளையாட்டு அரங்கில் மார்ச் 29-ம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சிட்டி எஃப்.சி. அணியும், கோவா சர்ச்சில் பிரதர்ஸ் எஃப்.சி. அணியும் மோதுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT