Published : 18 Aug 2015 09:45 AM
Last Updated : 18 Aug 2015 09:45 AM
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவும், மகளிர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச்சும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது ரோஜர்ஸ் கோப்பை என்ற பெயரில் வழங்கப் படுகிறது. இது, கனடாவின் மான்ட் ரியால் மற்றும் டொரான்டோ நகர்களில் நடத்தப்படுகிறது. ஒற் றைப்படை ஆண்டுகளில் மான்ட்ரி யால் நகரிலும், இரட்டைப்படை ஆண்டாக இருப்பின் டொரான்டோ நகரிலும் ஆடவர் போட்டிகள் நடைபெறும். மகளிர் போட்டி இதற்கு எதிர்ப்பதமாக நடைபெறும்.
மான்ட்ரியால் நகரில் நடை பெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 2-ம் நிலை வீரர் பிரிட்டனின் ஆன்டி முர்ரே மோதினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜோகோவிச்சை முர்ரே வீழ்த்திய தில்லை. மேலும், இந்த சீசனில் 52 போட்டிகளில் வெற்றியை ருசித்து, 3 தோல்விகளை மட்டுமே ஜோகோவிச் சந்தித்திருந்ததால், ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
ஆனால், அபாரமாக ஆடிய ஆன்டி முர்ரே முதல் செட்டை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சுதாரித்த ஜோகோவிச் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் முர்ரே ஆதிக்கம் செலுத்தினார். இதில் முழுக்க முழுக்க முர்ரேவின் கை ஓங்கியிருந்தது. இறுதி யில் 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் மூன்றாவது செட்டை வென்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி னார். இப்போட்டி 3 மணி நேரம் நடைபெற்றது. கடந்த 2013-ம் ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு பிறகு தற்போதுதான் ஜோகோவிச்சை வீழ்த்துகிறார் முர்ரே.
பயிற்சியாளருக்கு சமர்ப்பணம்
முர்ரேவின் பயிற்சியாளர் முன் னாள் டென்னிஸ் வீராங்கனை மவு ரிஸ்மோ ஆவார். இப்போட்டிக்கு சில மணி நேரம் முன்னதாக மவுரிஸ்மோவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது வெற்றியை மவுரிஸ் மோவுக்கு சமர்ப்பித்தார் முர்ரே.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
அவர் (மவுரிஸ்மோ) இப்போது சோர்வாக இருப்பார். நானும், டென் னிஸும் அவருக்கு தற்போதைய மனநிலையில் இரண்டாம்பட்சம் தான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் தற்போது நலமாக இருக்கிறார். எல்லாம் நல்லபடியாக முடிந்தது. இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. மூன்றாவது செட்டில் நான் மிகச்சிறப்பாகப் போராடினேன், முக்கியமான தருணங்களில் நிதான மாக இருந்தேன்” என்றார்.
ஜோகோவிச் கூறும்போது, “தோல்வியுறுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆனால் எல்லா வற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. வரும் வாரத்தில் எனது வலது முழங்கையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருக்கிறேன். சிறந்த வீரரிடம்தான் தோல்வி யடைந்தேன். முர்ரேவை நான் நன்கு அறிவேன். கடைசி புள்ளி வரை போராடினேன். என்னால் இயன்றதைச் சிறப்பாகச் செய் தேன். இந்த வெற்றிக்கு முர்ரே முழு தகுதியுடையவர்தான்” என்றார்.
பென்சிச் சாம்பியன்
டொரான்டோவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதியில் ருமேனியாவின் சைமோனா ஹேலப்பும், ஸ்விட்சர்லாந்தின் பென்சிச்சும் மோதினர். இதில் முதல் செட்டை 7-6 (7/5) என்ற கணக்கில் கைப்பற்றினார் பென்சிச். இரண்டாவது செட்டை 6-7 (4/7) என்ற புள்ளிகள் கணக்கில் ஹேலப் பிடம் இழந்தார். வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் பென்சிச் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தபோது, காயம் காரணமாக விலகுவதாக ஹேலப் தெரிவித்தார். இதையடுத்து பென்சிச் சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.
இவ்வெற்றி தொடர்பாக பென்சிச் கூறும்போது, “எனக்கு சிறப்பாக பேச வராது. இந்த வாரம் மிகச்சிறப்பாக அமைந்ததற் காக, ஹேலப், என பெற் றோர், என் அணியினர் அனை வருக்கும் நன்றி. நான் தோல்வி யடைந்திருந்தால் கூட, மிகச்சிறப் பான அனுபவமாகவே இது இருந் திருக்கும்” என்றார்.
இந்த வெற்றியின் மூலம் டபிள்யூடிஏ தரவரிசையில் முர்ரே 2-வது இடத்துக்கும், பென்சிச் 12-வது இடத்துக்கும் முன்னேறியுள்ள னர். ஆடவர் பிரிவில் முதலிடத்தில் ஜோகோவிச்சும், 3-வது இடத்தில் பெடரரும் உள்ளனர்.
மகளிர் பிரிவில் முதல் மூன்று இடங்களில் செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா, சைமோனா ஹேலப் ஆகியோர் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT