Published : 03 Feb 2020 04:22 PM
Last Updated : 03 Feb 2020 04:22 PM

இம்ரான் தலைமையில் பாகிஸ்தான் அணி போல் கோலி தலைமையில் இந்திய அணி: சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து 

பாகிஸ்தான் அணிக்கு இம்ரான் கான் கேப்டனாக இருந்த போது அந்த அணி வீரர்களிடத்தில் இருந்த தன்னம்பிக்கை போன்று விராட் கோலி தலைமையிலும் இந்திய அணி வீரர்களிடத்தில் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்தார்.

மஞ்சுரேக்கர் எப்போதுமே இம்ரான் கான் கேப்டன்சியின் பெரிய விசிறி, இதை அவர் பல பேட்டிகளிலும் கட்டுரைகளிலும் தெரிவித்த ஒன்றுதான்.

இந்நிலையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் தொடர் ட்வீட்களில் விராட் கோலி கேப்டன்சியை இம்ரான் கான் கேப்டன்சியுடன் ஒப்பிட்டுள்ளார்:

கோலி தலைமை இந்திய அணி எனக்கு இம்ரான் தலைமை பாகிஸ்தான் அணியை நினைவூட்டுகிறது. ஓரு அணியாக வலுவான தன்னம்பிக்கை. இம்ரான் தலைமையில் வெற்றி பெற பலவழிகளை அந்த அணி கையாளும் அதே போல் தோல்வியடையும் நிலையிலிருந்தும் கோலி தலைமை இந்திய அணி வெற்றி பெற்று வருகிறது. ஒரு அணியாக வலுவான தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வீரர் என்றால் அது என்னைப் பொறுத்தவரை விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மனாகவும் ஜொலித்த கே.எல்.ராகுல்தான்.

சாம்சன், ரிஷப் பந்த் இந்தியாவின் அடுத்த பேட்டிங் பவர் ஹவுஸ் ஆவார்கள், இவர்கள் தங்கள் பேட்டிங்கில் கோலியின் மனநிலையை உட்புகுத்தி கொள்ள வேண்டிய தேவை உள்ளது, என்றார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x