Published : 31 Jan 2020 12:26 PM
Last Updated : 31 Jan 2020 12:26 PM
வெலிங்டனில் நடைபெறும் 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது, 3-0 என்று தொடரை இழந்த நிலையில் ஆறுதல் வெற்றியை நோக்கி நியூஸிலாந்து களமிறங்கியுள்ளது.
ஆனால் அந்த அணிக்குப் பின்னடைவாக கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக இந்தப் போட்டியில் ஆடவில்லை, அவருக்குப் பதிலாக டிம் சவுதி கேப்டன் பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன் அணிக்கு வந்துள்ளார். அதே போல் ஷமி, ஜடேஜாவுக்குப் பதில் சைனி, வாஷிங்டன் சுந்தர் அணிக்கு வந்துள்ளனர்.
மைதானத்தில் பிட்சின் இருபுறமும் உள்ள பக்கவாட்டு பவுண்டரிகள் நீளம் குறைவானது.
நியூஸிலாந்து அணியில் வில்லியம்சன், கொலின் டி கிராண்ட் ஹோமுக்குப் பதிலாக டாம் புரூஸ், டேரில் மிட்செல் ஆகியோர் அணிக்குள் வந்துள்ளனர்.
இந்த மைதானத்தில் கடைசி 5 தருணங்களில் முதலில் பேட் செய்த அணி 4 முறை வென்றுள்ளது. கடந்த 5 போட்டிகளில் இங்கு முதலில் பேட் செய்யும் அணியின் சராசரி ஸ்கோர் 178 ரன்கள். இந்தப் பிட்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் 2018 முதல் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
ஸ்பின்னர்களும் சிக்கனமாக வீசியுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT