Published : 30 Jan 2020 11:47 AM
Last Updated : 30 Jan 2020 11:47 AM
டி20 தொடரை நியூஸிலாந்து இழந்ததையடுத்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் நியூஸிலாந்து அணி புதுமுகங்கள் கொண்ட ஒருநாள் அணியை அறிவித்துள்ளது.
இதில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் கைலி ஜேமிஸன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்களுடன் ஸ்காட் குக்கலீன், ஹாமிஷ் பென்னட் ஆகியோரும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களான ட்ரெண்ட் போல்ட், மேட் ஹென்றி, பெர்கூசன் ஆகியோர் இன்னமும் காயத்திலிருந்து விடுபடவில்லை. இந்நிலையில் அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட பென்னட் மற்றும் குக்கலீன் ஆகியோர் கடைசியாக அயர்லாந்துக்கு எதிராக 2017-ல் ஒருநாள் போட்டியில் ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டிங்கில் ஹென்றி நிகோல்ஸ் அணியில் நீடிக்கிறார். அதே போல் நியூஸிலாந்தின் அனுபவ விக்கெட் கீப்பர் டாம் லேதம் விக்கெட் கீப்பராக அணியில் மீண்டும் தேர்வாகியுள்ளார்.
நியூஸிலாந்து ஒருநாள் அணி வருமாறு:
கேன் வில்லியம்சன், ஹாமிஷ் பென்னட், டாம் பிளண்டெல், கொலின் டி கிராண்ட் ஹோம், மார்டின் கப்தில், ஜேமிசன், ஸ்காட் குக்கலீன், டாம் லேதம், ஜிம்மி நீஷம், ஹென்றி நிகோல்ஸ், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, ராஸ் டெய்லர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT