Published : 24 Jan 2020 12:16 PM
Last Updated : 24 Jan 2020 12:16 PM

முதல் டி20 போட்டி: டாஸ் வென்றார் விராட் கோலி; 6 பந்துவீச்சாளர்களுடன களம் காணும் இந்தியா: ஆடுகளம் எப்படி?

கோப்பையுடன் விராட் கோலி, கேன் வில்லியம்ஸன் : கோப்புப்படம்

ஆக்லாந்து,

ஆக்லாந்தில் நடைபெறும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

நியூஸிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடஉள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், 6 பந்துவீச்சாளர்களுடன் கோலி களமிறங்குகிறார். 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களும், யஜுவேந்திர சாஹல், ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் இருப்பதால், ரிஷப்பந்துக்கு வாய்ப்பு இல்லை. ரோஹித் சர்மா, கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே உள்ளனர்.

சஞ்சு சாம்ஸன், ஷைனி, வாஷிங்டன், சுந்தர், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு இல்லை.

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை ஹேமிஷ் பென்னட் எனும் வேகப்பந்துவீச்சாளர் டி20 போட்டியில் அறிமுகமாகிறார். ஒருநாள் போட்டியில்விளையாடிய அனுபவம் இருந்தாலும், முதன்முதலாக இந்தியாவுக்கு எதிராக களமிறங்குகிறார்.

நியூஸிலாந்து அணியில் மார்டின் கப்தில், முன்ரோ, வில்லியம்ஸன், ராஸ் டெய்லர், டிம் ஷீபெர்ட், கோலின் டி கிரான்ட்ஹோம், மிட்ஷெல் சான்ட்னர், டிம் சவுதி, ஈஷ் சோதி, பிளேட் டிக்னர், ஹமிஷ் பென்னட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி டி20 போட்டிகளில் இதுவரை சுமாராகவே விளையாடி வருகிறது. இந்திய அணியைக்காட்டிலும் ஹிட்டர்ஸ் அதிகமாக அந்தஅணியில் இடம் பெற்றுள்ளார்கள் சாதகமானதாகும்.

ஆடுகளம் எப்படி

ஆக்லாந்து ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாகும். இதனால், வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகள் நன்றாக எழும்பியும், ஸ்விங் ஆகும். மேலும் பந்துகள் பேட்ஸ்மேனை நோக்கி வேகமாக வரும் என்பதால், அடித்து விளையாடுவதும் எளிது. அதே நேரத்தில் விக்கெட் வீழ்த்துவதும் எளிதாகவே இருக்கும். துல்லியமாக, லைன்லெத்தின் வீசும் பந்துகளை அடித்து ஆடுவது இங்குச் சிரமமாக இருக்கும். இரவு நேரத்தில் வீசும் காற்று, சுழற்பந்துவீச்சாளர்களுக்கும், ஸ்விங் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமான அம்சமாகும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x