Published : 18 Jan 2020 02:43 PM
Last Updated : 18 Jan 2020 02:43 PM
ஒரு முறை இங்கிலாந்து அணி படுமோசமான தோல்விகளைச் சந்தித்து வந்த போது கிரிக்கெட் எழுத்தாளர் டெட் கார்பெட் என்பவர் மிகவும் நகைச்சுவையுடன் ஒன்றைக் கூறினார், ‘வக்கார் யூனிசும், முஷ்டாக் அகமடும் இங்கிலாந்தை ஆரஞ்சுப்பழத்தில் வீசியே வீழ்த்தி விடுவார்கள்’ என்றார்.
அதேதான் இப்போது தென் ஆப்பிரிக்க அணிக்கும் பொருந்தும் அது சீனியர் அணியாக இருந்தாலும், ஜூனியர் அணியாக இருந்தாலும், சீனியர் வீரர்க்ள் இங்கிலாந்து ஆஃப் ஸ்பின்னர் டாம் பெஸ் என்பவரிடம் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் யு-19 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் தென் ஆப்பிரிக்க அணி படுதோல்வி அடைந்துள்ளது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 29.1 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கான் இளம் லெக் ஸ்பின்னர் ஷபிக்குல்லா கஃபாரி 15 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
தென் ஆப்பிரிக்க யு-19 அணியில் பிரைஸ் பார்சன் (40), லூக் பியுபார்ட் (25), ஜெரால்ட் கொயெட்சீ (38) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கம் எட்டினர்.
இலக்கை விரட்டிய ஆப்கான் அணி 25 ஒவர்களில் 130/3 என்று அபார வெற்றி பெற்றது. இப்ரஹிம் சத்ரான் 57 ரன்களையும் இம்ரான் 52 ரன்களையும் எடுத்து தென் ஆப்பிரிக்காவை ஊதியது.
ரசீத் கான், முஜிபுர் ரஹ்மானைத் தொடர்ந்து மிகப்பெரிய திறமைசாலியாக இளம் லெக் ஸ்பின்னர் ஷபிக்குல்லா கஃபாரி அறியப்படுகிறார்.
தொடக்க தென் ஆப்பிரிக்க வீரர்களை ஆப்கான் இன்னொரு பவுலர் ஃபஸல் ஹக் வீழ்த்த, 3வது விக்கெட்டுக்காக பார்சன்ஸ், பியுபோர்ட் 55 ரன்களைச் சேர்த்தனர். சைனமன் பவுலர் நூர் அகமட், பார்சன்சை வீழ்த்த இளம் லெக் ஸ்பின்னர் கஃபாரிடம் மிடில் மற்றும் கீழ்வரிசை மடிந்தது. 28 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 90/8 என்று ஆனது. ஆனால் கோயெட்ஸீ 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் ஸ்கோரை 125 ரன்களைத் தாண்டச் செய்தார்.
விரட்டல் மிக எளிதானது 130/3 என்று 25 ஒவர்களில் தென் ஆப்பிரிக்காவின் கதையை முடித்தது ஆப்கான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT