Last Updated : 20 Aug, 2015 03:32 PM

 

Published : 20 Aug 2015 03:32 PM
Last Updated : 20 Aug 2015 03:32 PM

2-வது டெஸ்ட்: லோகேஷ் ராகுல் அபார சதம்

இலங்கைக்கு எதிராக பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் அபாரமாக விளையாடி தனது 2-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார்.

அவர் 190 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 108 ரன்கள் எடுத்து சற்று முன் சமீராவின் பவுன்சருக்கு ஆட்டமிழந்தார். , ரோஹித் சர்மா, 1 பவுண்டரி 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். பின்னி களமிறங்கியுள்ளார். , இந்தியா தேநீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கி ராகுல் விக்கெட்டை இழந்து 233 ரன்கள் எடுத்துள்ளது.

தேநீர் இடைவேளையின் போது 98 நாட் அவுட்டாக இருந்த லோகேஷ் ராகுல், தேநீர் இடைவேளைக்குப் பிறகு முதல் ஓவரை வீசிய சமீராவின் லெக் திசை பந்தை கனெக்ட் செய்வதில் கோட்டை விட்டார்., ஆனால் அடுத்த கவுஷால் ஓவரில் லெக் திசையில் தட்டி விட்டு 2 ரிஸ்க் ரன்களை எடுத்தார், கடைசியில் டைவ் அடித்து கிரீஸை எட்டி சதத்தை எடுத்த மகிழ்ச்சியில் ஹெல்மெட்டிற்கு முத்தமிட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எடுக்கும் 2-வது சதமாகும் இது. சதம் எடுத்ததை கொண்டாடும் விதமாக அதே ஓவரில் மேலேறி வந்து பவுலருக்கும் மிட் ஆஃபுக்கும் இடையே பவுண்டரி விளாசினார்.

இன்று காலை முதல் ஒரு மணிநேரம் பிட்சில் கொஞ்சம் சாறு இருந்தது அதனால் தம்மிக பிரசாத், சமீரா இருவரும் அபாரமாக வீசினர், முரளி விஜய் முதல் ஓவரின் 4-வது பந்தில் உள்ளே வந்த ஸ்விங் பந்துக்கு மட்டையை விரைவில் பந்துக்கு கொண்டு வர முடியாமல் எல்.பி.ஆனார்.

ரோஹித் சர்மாவை காப்பாற்ற ரஹானேயை 3-வது நிலையில் களமிறக்கினர், தம்மிக பிரசாத் போதிய வேகத்துடன் ஆஃப் ஸ்டம்புக்கு சற்றே தள்ளி ஒரு அவுட் ஸ்விங்கரை வீச ரஹானே அதனை தொட்டார் 3-வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. 4 ரன்களில் அவரும் அவுட்.

நெருக்கடியில் கோலி, ராகுலுடன் இணைந்தார், ராகுல் தொடக்கத்திலேயே அவுட் ஆகியிருப்பார், ஆனால், சமீராவின் அருமையான ஒரு வேகப்பந்தை ராகுல் கட் செய்ய முயல அது நேராக ஜெஹன் முபாரக்கிடம் ஆஃப் திசையில் சென்றது அவர் அதனை நழுவ விட்டார், இது காஸ்ட்லி மிஸ் ஆகியுள்ளது தற்போது. ராகுல் சதம் எடுத்த பிறகே ஆட்டமிழந்துள்ளார்.

கோலியும், ராகுலும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 164 ரன்களைச் சேர்த்து 12/2 என்று நிலை தடுமாறிய இந்திய அணியை மீட்டனர்.

விராட் கோலிக்கும் ரங்கனா ஹெராத், தன் பவுலிங்கில் ஒரு கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டார், ஆனால் அதன் பிறகு அவரும் நிலைத்து ஆடினார். கடைசியில் 78 ரன்கள் எடுத்து ரங்கனா ஹெராத் பொறியில் சிக்கி ஸ்லிப்பில் மேத்யூஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x