Published : 06 Jan 2020 07:44 PM
Last Updated : 06 Jan 2020 07:44 PM
கோடை கிரிக்கெட்டை பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு எதிராக 5-0 என்று வெற்றி பெற்ற புத்துயிர் பெற்ற ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி அடுத்த டிசம்பர் 2020-ல் டெஸ்ட் போட்டிகளில் அங்கு சந்திக்கிறது.
கடந்த முறை வார்னர், ஸ்மித், இப்போதைய லபுஷான் ஆகியோர் இல்லை இந்திய அணி புஜாராவின் 3 சதங்கள், விராட் கோலியின் அபார பேட்டிங்குடன் அனைத்திற்கும் மேலாக பும்ரா, ஷமி உள்ளிட்ட அபாரப் பந்து வீச்சிலும் குல்தீப் யாதவ்வின் அபார ஸ்பின்னிலும் ஆஸி.யைப் படுத்தி எடுத்து 2-1 என்று தொடரை முதன் முறையாக ஆஸி.யில் கைப்பற்றிய துணைக்கண்ட அணி என்ற பெருமையை ஈட்டியது.
இந்நிலையில் நியூஸி.க்கு ஒயிட்வாஷ் அளித்த பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியதாவது:
அடுத்த கோடைக்கால கிரிக்கெட் மீது எங்கள் கண் இப்போதே உள்ளது. பங்களாதேஷ் சென்று சில வெற்றிகளைப் பெற திட்டமிட்டுள்ளோம். பிறகு ஆஸ்திரேலியா வருகிறது இந்திய அணி, அந்தத் தொடர் உண்மையில் ரசிகர்களுக்கும் அணிகளுக்குமே விருந்தாக அமையும்.
கடந்த முறை இந்திய அணி எதிர்கொண்ட அணி அல்ல நாங்கள் இப்போது. இந்தத் தொடரில் பல விஷயங்களை நிரூபிக்க வேண்டியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், இரு அணிகளுமே இறுதிக்கு முன்னேறத் துடிக்கும் அணி ஆகவே அந்தத் தொடர் மிக மிக முக்கியமானது.
கடந்த 12 மாதங்களாக எங்கள் அணி பலவிதங்களில் முன்னேறி வருவதைப் பார்க்கும் போது டாப் 2 அணிகள் அதில் மோதுவது என்பது மிகவும் சுவாரசியமான ஒரு தொடராக அதை மாற்றும்
ஆஸ்திரேலியாவில் எங்கள் அணியின் பந்து வீச்சு எப்படி ஒவ்வொரு துளியும் அச்சுறுத்தலோ அதற்குச் சமமாக இந்திய அணியின் பந்து வீச்சும் ஒவ்வொரு துளியும் அச்சுறுத்தலே. எனவே அதனை நாங்கள் கூர்ந்து அவதானிக்கிறோம்.
என்றார் டிம் பெய்ன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT