Published : 01 Jan 2020 04:52 PM
Last Updated : 01 Jan 2020 04:52 PM
25 வயது பாகிஸ்தான் வலது கை பேட்ஸ்மென் பாபர் ஆசம் 2019-ம் ஆண்டு சிறப்பாக விளையாடிய சிலபல வீர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். பொதுவாகவே திணறும் பாகிஸ்தான் பேட்டிங்கின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் ஆசம் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார், ஒருநாள் போட்டிகளில் வைஸ்-கேப்டனாக இருக்கிறார்.
தற்போது டி20 தரவரிசையில் நம்பர் 1, டெஸ்ட் போட்டிகலில் 6ம் இடம், ஒருநாள் போட்டிகளில் 3ம் இடம் என்று பாபர் ஆசம் ஜொலிக்கிறார்.
2019-ம் ஆண்டு பாபர் ஆசமுக்கு ‘ஆஸம்’ஆண்டாக இருந்தது. 6 டெஸ்ட் போட்டிகளில் 616 ரன்கள், இதில் 3 சதங்கள் 3 அரைசதங்கள். சராசரி 68.44
20 ஒருநாள் போட்டிகளில் 1092 ரன்கள், சராசரி 60.66, ஸ்ட்ரைக் ரேட் 93.30.
10 டி20 போட்டிகளில் 374 ரன்கள், சராசரி 41. 55, ஸ்ட்ரைக் ரேட் 137.
2019 உலகக்கோப்பையில் 474 ரன்கள், சராசரி 67.71.7
தனது அபாரமான 2019 குறித்து பாபர் ஆசம் கூறும்போது, “டெஸ்ட் கிரிக்கெட்டை அதிகம் ஆட ஆட அதன் நுணுக்கங்கள் புரியவருகிறது, டேல் ஸ்டெய்னுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவில் எனது இன்னிங்ஸ் என் கரியரை மாற்றிய இன்னிங்ஸ் ஆகும். இந்த இன்னிங்ஸ் என் நம்பிக்கையை வளர்த்தது. இப்போது 60, 70 ரன்களையும் 100ஆக மாற்ற முடிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அங்கே அடித்த சதமும் என் மீதான நம்பிக்கையை உறுதி செய்தது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT