Last Updated : 30 Dec, 2019 05:38 PM

 

Published : 30 Dec 2019 05:38 PM
Last Updated : 30 Dec 2019 05:38 PM

அகில இந்தியப் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும்போதே உயிரிழந்த கேரள கால்பந்து வீரர்  

மறைந்த கேரள கால்பந்துவீரர் தனராஜன் | படம்: ட்விட்டர்

கொச்சி

கேரளாவில் கால்பந்துப் போட்டி நடந்துகொண்டிருக்கும்போதே விளையாட்டு வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 39.

செவன்ஸ் கால்பந்து சங்கம். எஃப்.சி. பெரிந்தல்மண்ணா அணியின் உறுப்பினரான தன்ராஜ் விளையாட்டின்போதே உயிரிழந்தார். தனராஜன் சந்தோஷ் டிராபியில் வங்காளத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர். இந்தியாவின் சில சிறந்த கிளப்களான மோகன் பகான் மற்றும் கிழக்கு வங்காளத்துக்காக அவர் விளையாடி வெற்றிகளைக் குவித்து பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

நேற்றிரவு மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னாவில் அமைந்துள்ள நேரு ஸ்டேடியத்தில் அகில இந்திய அளவிலான செவன்ஸ் கால்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எஃப்சி பெரிந்தால்மன்னாவுக்கும் சாஸ்தா திருச்சூருக்கும் இடையிலான போட்டி அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்தது.

திடீரென விளையாட்டு தொடங்கி 27வது நிமிடத்தில் கால்பந்து வீரர் தனராஜன் திடீரென தனது இடது கையை உயர்த்தி சரிந்து கீழே விழுந்தார்.

தரையில் சரிந்துவிழுந்த தனராஜன் மூச்சு இழப்பு மற்றும் மார்புவலியால் துடித்தார். இதனை அடுத்து அவர் உடனடியாக பெரிந்தல்மண்ணாவில் உள்ள மவுலானா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதயப் பிரச்சினை காரணமாக அவரது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x