Published : 30 Dec 2019 09:42 AM
Last Updated : 30 Dec 2019 09:42 AM

உலக மகளிர் விரைவு செஸ் கோனேரு ஹம்பி சாம்பியன்

புதுடெல்லி

ரஷியாவில் நடைபெற்ற உலக மகளிர் விரைவு செஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பி பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ரஷியாவின் மாஸ்கோ நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சீனாவின் லீ டிங்ஜியை வென்று பட்டத்தைக் கைப்பற்றினார் ஹம்பி.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த போட்டியின் 3-ம் நாளில் நான் எனது ஆட்டத்தை தொடங்கும்போது முதலிடம் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை. முதல் 3 இடங்களுக்கு வருவேன் என்று நினைத்திருந்தேன்” என்றார்.

விரைவு செஸ் போட்டியின் முதல் பிரிவில் தோல்வி கண்ட ஹம்பி, அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். ஆடவர் பிரிவில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பிடித்தார்.

– பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x