Published : 26 Dec 2019 04:20 PM
Last Updated : 26 Dec 2019 04:20 PM
கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்கள் குறித்து விஸ்டன் வெளியிட்ட 5 வீரர்கள் பட்டியலில் இந்திய அணி சார்பில் கேப்டன் விராட் கோலி ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.
விஸ்டன் வெளியிட்ட பட்டியலி்ல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தவிர்த்து, ஆஸ்திரேலியாவின் ஸ்வீவ் ஸ்மித், ஆஸி.மகளிர் அணி வீராங்கனை எல்ஸி பெரி, தென் ஆப்பிரிக்க வீரர்கள் டேல் ஸ்டெயின், ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
விராட் கோலி குறித்து விஸ்டன் குறிப்பிட்டுள்ளதாவது, " விராட் கோலியின் திறமை சவாலான நேரங்களில் ஒவ்வொரு முறையும் மீண்டும், மீண்டும் பளிச்சிடுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் இருந்து நவம்பர் மாதம் முடிந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கோலியின் சராசரி 63 ஆகவும், 21 சதங்களையும், 13 அரைசதங்களையும் அடித்துள்ளார்
கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி சர்வதேச அளவில் 5,775 ரன்களும் அதில் 22 சதங்களை வெளிநாட்டிலும் அடித்துள்ளார். ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் தனது பேட்டிங் சராசரியை 50 ரன்களுக்கு குறையாமல் வைத்திருக்கும் ஒரே வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி 2019-ம் ஆண்டில் மட்டும் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் சேர்த்து 2,370 ரன்கள் சேர்த்து தனது பேட்டிங் சராசரியை 64 ஆக வைத்துள்ளார்கள். தொடர்ந்து 4-வது ஆண்டாக 2 ரன்களுக்கு மேல் கோலி சேர்த்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பெயரும் விஸ்டனில் குறிப்பிட்டாலும் விராட் கோலிக்கு இணையாகக் குறிப்பிட முடியாது. சச்சின் ஓய்வுக்குப்பின், தோனியின் பங்களிப்பு குறைவுக்குப்பின், உலகக்கிரிக்கெட்டில் விராட் கோலி அளவுக்கு அழுத்தத்தைச் சந்தித்தவர்கள் யாரும் இருக்க முடியாது .இவ்வாறு விஸ்டன் குறிப்பிட்டுள்ளது.
விராட் கோலி அனைத்து விதமான போட்டிகளிலும் அரைசதம் அடித்துவிட்டார். ஒட்டுமொத்தமாக 70 சதங்கள்அடித்து 3-வது இடத்தில் உள்ளார் முதலிடத்தில் சச்சின் 100 சதங்களுடனும், ரிக்கி பாண்டிங் 71 சதங்களுடன் 2-வது இடத்திலும்உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT