Last Updated : 12 Dec, 2019 05:41 PM

 

Published : 12 Dec 2019 05:41 PM
Last Updated : 12 Dec 2019 05:41 PM

சென்னைக்கு வந்துட்டோம்: முதல் ஒருநாள் போட்டிக்காக கோலி படையினர் வருகை

விராட் கோலி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள படம்: படம் உதவி ட்விட்டர்

சென்னை

சென்னை சேப்பாக்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் சில வீரர்கள் இன்று சென்னை வந்து சேர்ந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன.

இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் நாட்டுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுப்பயணம் சென்றபோது அந்நாட்டு அணியுடன் இந்திய அணி ஒருநாள் போட்டியில் விளையாடியது அதன் பின் இப்போது மீண்டும் இரு அணிகளும் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரை கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் டக்வொர்த் விதிப்படி 26 ரன்களில் இந்திய அணி வென்றது. அதன்பின் அங்கு ஒருநாள் போட்டிகள் நடக்கவில்லை. ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச ஒருநாள போட்டி நடைபெற இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா உள்ளிட் இந்திய வீரர்கள் இன்று பிற்பகலில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அதேபோல மேஇ.தீவுகள் வீரர்களும் சென்னை வந்து சேர்ந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சொகுசு பஸ் மூலம், தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சென்னை வந்துவிட்டோம் என்பதை உணர்த்தும் வகையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் " குல்தீப், ஜடேஜா, நான் சென்னையைத் தொட்டுவிட்டோம்" என்று புகைப்படத்தைப் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் வரும் 18-ம் தேதியும், 22-ம் தேதி கட்டாக்கில் 3-வது ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x