

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கடந்த ஐபிஎல் போட்டித் தொடரில் இருந்த மும்பை வேகப்பந்து வீச்சாளர் தவல் குல்கர்னி மீண்டும் தன் தாய்வீடான மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்புகிறார்.
ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடிய தவல் குல்கர்னி, 33 போட்டிகளில் 36 விக்கெட்டுகளை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எடுத்துள்ளார்.
இவர் இன்னும் 100 ஐபிஎல் போட்டிகளில் என்ற மைல்கல்லை எட்ட இன்னும் 10 போட்டிகள் மீதமுள்ளன, அதே போல் 100 ஐபிஎல் விக்கெட்டுகளுக்கு இன்னும் 14 விக்கெட்டுகளே பாக்கி.
அதே போல் இன்று நடந்த மற்ற வீரர்கள் மாற்றங்களில் மயங்க் மார்க்கண்டே, திவேதியா ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு அனுப்பப்பட்டனர்.