Last Updated : 13 Nov, 2019 10:53 AM

1  

Published : 13 Nov 2019 10:53 AM
Last Updated : 13 Nov 2019 10:53 AM

கிரேக் சேப்பலால் புறக்கணிப்பு... தோனியால் புகழின் உச்சம்: தீபக் சாஹர் கடந்து வந்த பாதை...

வங்கதேச அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாக்பூரில் நடைபெற்ற டி 20 ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் 3.2 ஓவர்களை வீசி ஹாட்ரிக் சாதனையுடன் வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.

டி 20 கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள தீபக் சாஹர் ஒரு காலக்கட்டத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஒருவரால் நிராகரிக்கப்பட்டவர்தான். 2008-ம் ஆண்டு ராஜஸ்தான் கிரிக் கெட் சங்க அகாடமியின் இயக்குந ராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் பணியாற்றினார்.

அப்போது நடை பெற்ற தேர்வில் ராஜஸ் தான் கிரிக்கெட்டுக்கு தகுதியற்றவர் என முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப் பட்டார் தீபக் சாஹர். 18 வயதான தீபக் சாஹர் அப்போது மனம் உடைந்து அப்படியே உட்கார்ந்துவிடவில்லை. உடற் பயிற்சி முறை, பந்து வீச்சு பாணி, பந்து வீச்சு வேகம் ஆகியவற்றை வேறு ஒரு கோணத்துக்கு மாற்றியபடி அதிதீவிரமாக பயிற்சியில் இறங்கினார். சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு 2010-ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக் காக ரஞ்சி கோப்பையில் அறிமுகம் ஆனார்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே தனது அபார மான ஸ்விங் பந்து வீச்சால் 7.3 ஓவர் களை வீசி 8 விக்கெட்களை வேட்டை யாடினார். தீபக் சாஹரின் அனல் பறந்த பந்து வீச்சால் ஹைதராபாத் அணி முதல் இன்னிங்ஸில் 21 ரன்களுக்கு சுருண்டது.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி யில் தனது இடத்தை வேரூன்றிக் கொண்டார் தீபக் சாஹர். ஆனால் காயங்கள், விமர்சனங்கள் அவ ரது கிரிக்கெட் வாழ்க்கையை தடம் புரட்ட முயற்சித்தன. ஒரு முறை மஞ்சள் காமாலை, பின்னர் கட்டைவிரல் காயத்தால் அவதிக்குள்ளானார் தீபக் சாஹர். உள்நாட்டு சீசன் தொடங்கவிருந்தபோது இந்த பிரச்சினைகள் அதிகரித்தன.

அப்போதும் தனது விடா முயற்சியால் கடினமாக உழைத்து மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் முத்திரை பதிக்க தொடங் கினார். 2016 மற்றும் 2017-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை காலத்தை சந்தித்திருந்த நிலையில் அந்த அணியில் விளையாடிய தோனி உட்பட பெரும்பாலான வீரர்கள் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக களமிறங்கினர்.

அப்போதுதான் தீபக் சாஹர், புனே அணியின் கேப்டனாக செயல்பட்ட தோனியின் கடைக்கண்ணில் சிக்கினார். கட்டாயம் விளையாடும் லெவனில் நீ இடம் பெறுவாய் என தோனி நம்பிக்கை தெரிவித்த நிலையில் முதல் பயிற்சி ஆட்டத்தின் போது துரதிருஷ்டவசமாக தீபக் சாஹர் காயம் அடைந்தார். இதனால் தொடரின் கடைசி கட்டத்தில் 2 முதல் 3 ஆட்டங்களில் மட்டுமே தீபக் சாஹருக்கு வாய்ப்பு கிடைத்தது.

2017-ம் ஆண்டில் புனே அணியின் கேப்ட னாக தோனிக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் செயல்பட்டார். அவ ருடைய திட்டங்கள் வேறு விதமாக இருந்ததால் தீபக்சாஹருக்கு இரண்டு, மூன்று போட்டிகளில் மட்டுமே விளை யாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் கடும் ஏமாற்றம் அடைந்தார் தீபக் சாஹர். அப்போது தீபக் சாஹரிடம் தோனி கூறியது ஒன்றுதான்.

அடுத்த ஆண்டு (2018) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கும். உன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அழைத்துச் சென்று நன்றாகத் தயார் செய்கிறேன் என்பதுதான். இதற்கிடையே 2018-ம் ஆண்டில் சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் பங்கேற்ற தீபக் சாஹர் கர்நாடக அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்களுக்கு 5 விக்கெட்களை வேட்டை யாடி கவனத்தை ஈர்த்தார்.

இது வசதியாக அமைய வாக்கு அளித்த படியே அணி நிர்வாகத்திடம் கூறி, 2018-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் தீபக் சாஹரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெறச் செய்தார் தோனி. அந்த ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி வாகை சூடியது. அந்த சீசனில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட தீபக் சாஹர் 10 விக்கெட்கள் கைப்பற்றினார்.

தொடர்ந்து தோனியால் பட்டை தீட்டப்பட 2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 22 விக்கெட்களை வேட்டையாடி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 3-வது இடம் வகித்தார் தீபக் சாஹர். ஆரம்ப கட்டத்தில் ஸ்விங் பந்து வீச்சால் பவர் பிளே ஓவர்களில் அதிக அளவில் தீபக் சாஹரை தோனி பயன்படுத்தினார். இதன் பின்னர் அவரது செயல் திறனை இறுதிக்கட்ட ஓவர்களிலும் பயன்படுத்தி தீபக் சாஹரை ஒரு நேர்த்தியான, முழுமையான பந்து வீச்சாளராக உருவாக்கினார் தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாயிலாக தன் மீது விழுந்த வெளிச்சத்தை சர்வதேச கிரிக்கெட்டுக்கும் தற்போது வியாபிக்கச் செய்துள்ளார் தீபக் சாஹர்.

தீபக் சாஹர் கூறும் போது, “ஐபிஎல் தொடரில் சென்னையில் விளையாடியது பெரிதும் உதவியாக இருந்தது. சென்னை ஆடுகளத்தில் பனிப் பொழிவு அதிகமாக இருக்கும். மேலும் வியர்வையின் காரண மாகவும் அதிக அளவிலான தவறுகளை செய்துள்ளேன். சில தருணங்களில் நோ-பால்களையும் வீசியுள்ளேன், ஆனால் அவற்றில் இருந்து கற்றுக்கொண்டேன். அந்த அனுபவத்தில் இருந்துதான் பனிப் பொழிவு நேரங்களில் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன்.

ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் அடுத்தடுத்து இரு பந்துகளை பீமராக வீசினேன். இதனால் ஒரு கேப்டனாக தோனி கோபம் அடைந்தார். அந்த சமயத்தில் நான் கேப்டனாக இருந்திருந்தால் கூட கோபம் அடைந்திருப்பேன். ஏனெனில் பஞ்சாப் அணிக்கு அப்போது 39 ரன்கள் தேவையாக இருந்தது.

நான் வீசிய இரு பீமர்களால் அது 31 ரன்களாக குறைந்துவிட்டது. எனது பந்து வீச்சு தேர்வினால் தோனி கோபம் அடைந்தார். எனது கணிப்பு சரியாக அமைய வில்லை. ஆட்டம் முடிவடைந்ததும் இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங் களில் வைரலானது. அவரது கோபத்துக்கான காரணங்கள் சரியானதே என்பதை உணர்ந்தேன்” என்றார்.

கிரேக் சேப்பல் நிராகரித்தசம்பவம் கிரிக் கெட்டின் கடினமான வழிகளை 18 வயதில் தீபக்சாஹரை கற்றுக்கொள்ள வைத்தது. ஆனால் அதேநேரத்தில் சென்னைசூப்பர் கிங்ஸ்அணியும், அதன்கேப்டன் தோனி யின் வார்ப்புமே இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் பலசாதனை படைக்கபெரும் உந்துதலாகதீபக் சாஹருக்குஇருந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x