Published : 20 Aug 2015 09:41 AM
Last Updated : 20 Aug 2015 09:41 AM
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், குரேஷியாவின் இவா கார்லோவிச், மரின் சிலிச் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் நேரடியாக 2-வது சுற்றில் களமிறங்கிய ஃபெடரர் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பவுதிஸ்டா அகட்டை தோற்கடித்தார். இவா கார்லோவிச் 6-3, 7-6 (2) என்ற நேர் செட்களில் ஸ்லோவாகியாவின் மார்ட்டின் கிளிஸானையும், உக்ரை னின் அலெக்சாண்டர் டோல்கோ போலோவ் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் பெர்னாட் டாமிக்கையும், மரின் சிலிச் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ஜோ சவுசாவையும் வீழ்த்தினர்.
மகளிர் பிரிவைப் பொறுத்த வரையில் வீனஸ் வில்லியம்ஸ் வைரஸ் பாதிப்பின் காரணமாக 2-வது சுற்றில் இருந்து விலகினார். இதனால் செர்பியாவின் அனா இவானோவிச் 2-வது சுற்றில் விளையாடாமலேயே 3-வது சுற்றுக்கு முன்னேறினார். உலகின் 2-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா காயம் காரணமாக விலகியுள்ளார்.
மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் முன்னணி வீராங்கனை யான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரைத் தோற்கடித்தார். கடந்த வாரம் நடைபெற்ற ரோஜர் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பென்சிச், அடுத்ததாக இத்தாலியின் பிளேவியா பென்னட்டாவை சந்திக்கிறார். பென்னட்டா தனது முதல் சுற்றில் ஸ்லோவாகியாவின் டொமினிகா சிபுல்கோவாவைத் தோற்கடித் தார்.
காலிறுதியில் பயஸ் ஜோடி
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த ஜோடி தங்களின் முந்தைய சுற்றில் 7-6 (4), 3-6, 10-3 என்ற செட் கணக்கில் கனடாவின் வசேக் போஸ்பிஸில்-அமெரிக்காவின் ஜேக் சாக் ஜோடியைத் தோற்கடித்தது. ஒரு மணி, 17 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் 9 பிரேக் பாயிண்ட்களில் 8-ஐ பயஸ் ஜோடி மீட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT