Published : 27 Oct 2019 03:44 PM
Last Updated : 27 Oct 2019 03:44 PM

டாஸ் வெல்கிறார்கள் 500 அடிக்கிறார்கள் பிறகு எங்களை இருட்டில் இறக்கி விடுகிறார்கள்: இந்திய ஒயிட் வாஷ் பற்றி டுபிளெசி

டெஸ்ட் கிரிக்கெட்டில் டாஸ் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் படலத்துக்கு முடிவு கட்ட வேண்டும், என்று தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டுபிளெசி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் 3-0 என்று ஒயிட்வாஷ் வாங்கிய தென் ஆப்பிரிக்க அணி டாஸ் இந்திய அணிக்குச் சாதகமாக இருப்பது பற்றியும் முதல் 2 நாள் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக தொடர்ச்சியாக இருந்தது பற்றியும் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுபிளெசி கூறுவதாவது:

ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் டாஸ் வென்று முதலில் பேட் செய்து 500 ரன்களை அடிக்கின்றனர் இருட்டில் டிக்ளேர் செய்து இருட்டின் எங்ளது 3 விக்கெட்டுகளை வீழ்த்தி விடுகின்றனர். 3ம் நாள் ஆட்டத்தில் இறங்கும் போது நாம் கடும் அழுத்த நிலையில் ஆட வேண்டியிருக்கிறது. இதுதான் அங்கு ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் காப்பி அண்ட் பேஸ்ட் ஆகும்.

எனவே டாஸ் என்பதை அறவே ஒழித்து விட்டால் வருகை தரும் அணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும், இங்கு தென் ஆப்பிரிக்காவில் நான் டாஸைப் பொருட்படுத்த மாட்டேன், ஏனெனில் பசும்புல் ஆடுகளத்தில் நாங்கள் பேட் செய்வோம்.

இவ்வாறு கூறினார் டுபிளெசி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x