Published : 24 Oct 2019 05:55 PM
Last Updated : 24 Oct 2019 05:55 PM

கோலிக்கு ஓய்வு; ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் அணியில், ஷாபாஸ் நதீம் அவுட்: இந்திய அணி அறிவிப்பு

வங்கதேச அணி இந்தியாவில் பயணம் மேற்கோண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் ஆடுகிறது, இதில் 3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணியும், 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் டி20 தொடரிலிருந்து கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, ரோஹித் சர்மா கேப்டனாக பணியாற்றுவார்.

இந்திய டி20 அணியில் இளம் வீரர் ஷிவம் துபே மற்றும் அதிரடி இரட்டைச் சத சாதனை நிகழ்த்திய கேரளாவின் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர் ஜூலை 2015-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஹராரேயில் டி20யில் ஆடியதோடு சரி, அதன் பிறகு கதவுகளைத் தட்டிக் கொண்டேயிருந்தார் அல்லது காலிங் பெல்லை அழுத்திக் கொண்டே இருந்தார் இப்போதுதான் கதவுகள் திறந்துள்ளன.

3 டி20 போட்டிகள் நவம்பர் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை டெல்லி, ராஜ்கோட், நாக்பூர் மைதானங்களில் நடைபெறுகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்தூரில் நவ. 14 முதல் 18 வரையிலும் 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நவ 22 முதல் நவ. 26 வரையிலும் நடைபெறுகின்றன.

டெஸ்ட் அணியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் குல்தீப் காயம் காரணமாக இடம்பெற்ற ஷாபாஸ் நதீம் வங்கதேச்த்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இல்லை. இவர் இனி அடுத்த டெஸ்ட்டை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்... எப்போ வருமோ என்று காத்திருக்க வேண்டியதுதான்.

பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை. தோனி பற்றித் தெரியவில்லை. ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஷிவம் துபே தேர்வு செய்யப்பட்டுள்ளார், ராயுடுவை நீக்கும் போது ‘3டி’ வீரராக கண்ணுக்குத் தெரிந்த தமிழ்நாட்டு வீரர் விஜய் சங்கர் திடீரென 1டி வீரராகக் கூடத் தெரியவில்லை போலும். மிக முக்கியமான தேர்வு டி20, டெஸ்டில் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஹாதான் கீப்பர், அவருக்கு பதிலி கீப்பரகா பந்த் செயலப்டுவார்.

இவ்வளவு தேர்வுகளையும் நியாயப்படுத்தினாலும் சுத்தமாக அவுட் ஆஃப் பார்மில் இருக்கும் ஷிகர் தவண் இடம் பாதிக்கப்படவில்லை.

டி20 அணி வருமாறு: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவண், ராகுல், சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் அய்யர், மனீஷ் பாண்டே, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், குருணால் பாண்டியா, யஜுவேந்திர சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமெட், ஷிவம் துபே, ஷர்துல் தாக்குர்.

டெஸ்ட் அணி: விராட் கோலி, ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, விஹாரி, சஹா, ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஷமி, உமேஷ், ஷுப்மன் கில், ரிஷப் பந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x