Last Updated : 01 Jul, 2015 09:54 AM

 

Published : 01 Jul 2015 09:54 AM
Last Updated : 01 Jul 2015 09:54 AM

கோபா அமெரிக்க கால்பந்து: இறுதிப்போட்டியில் நுழைந்தது சிலி: பெருவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில், பெருவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சிலி அணி இத்தொடரில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தென் அமெரிக்காவின் பிரபல கால்பந்துப்போட்டியான கோபா அமெரிக்கா கால்பந்து சிலியில் நடந்து வருகிறது. இதன் முதல் அரையிறுதிப் போட்டியில் பெரு அணியும் போட்டியை நடத்தும் சிலி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

உருகுவேயுடனான காலிறுதிப் போட்டியில், உருகுவே வீரர் கவானி யைத் தள்ளியதற்காக சிலியின் சிறந்த பின்கள வீரரான ஜாராவுக்கு 3 போட்டி களில் விளையாட தடை விதிக்கப் பட்டது. இதனால், பெருவுக்கு எதிரான போட்டியில் ஜாரா இல்லாமல் களமிறங் கியது சிலி.

பெருவின் கார்லோஸ் ஜம்ப்ரானோ மோதல் போக்கைக் கடைப்பிடித்ததால் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப் பட்டார். தொடர்ந்து அவ்வாறே விளை யாடியதால் 20-வது நிமிடத்தில் அவர் வெளியேற்றப்பட்டார்.

சர்ச்சை கோல்

போட்டியின் 42-வது நிமிடத்தில் எட்வர்டோ வர்காஸ் கோல் கம்பத்தின் மிக அருகில் இருந்து ஒரு கோலடித்தார். அது ஆஃப்சைடு கோல் என்றும், உதவி நடுவர் அதனைக் கவனிக்கத் தவறிவிட்டார் எனவும் பின்னர் சர்ச்சை எழுந்தது.

இதன்பின்னர் இரு அணிகளும் கடுமையாக மோதியதால் ஆட்டத்தில் பெரும் விறுவிறுப்பு ஏற்பட்டது. ஆட்டத் தின் 60-வது நிமிடத்தில் சிலி வீரர் கேரி மெடல், ‘சேம் சைடு’ கோல் அடிக்கப்பட காரணமாக இருந்தார். இதனால் இரு அணிகளும் சமநிலை வகித்தன.

ஆனால், சிலியின் வர்காஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார். 64-வது நிமிடத்தில் நடுக்களத்தில் தனக்குக் கிடைத்த பந்தை எதிரணி வீரர்களை ஏமாற்றி அசுர வேகத்தில் எடுத்து வந்த வர்காஸ் 30 யார்டு ( 90 அடி) தொலைவில் இருந்து பெரு கோல்கீப்பர் பெட்ரே கல்லெஸை ஏமாற்றி கோல் வளைக்குள் செலுத்தினார்.

அப்போது ஒட்டுமொத்த அரங்கமும் சிலி ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அதிர்ந்தது. 2-1 என்ற கோல் கணக்கில் சிலி முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இறுதி நேரம் வரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால், 2-1 என்ற கோல் கணக்கில் தனது பரம வைரியான பெருவை வென்ற சிலி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இத்தொடரில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு சிலி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த 1987-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சிலி அணி தோல்வியுற்றது.

நாயகன் வர்காஸ்

இரண்டு கோல்கள் அடித்து சிலி அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ள வர்காஸுக்கு பாராட்டுகள் குவிகின்றன. குறிப்பாக 30 யார்ட் தொலைவிலிருந்து அவர் அடித்த 2-வது கோல் பற்றி சிலி ரசிகர்கள் சிலாகித்துப் பேசி வருகின்றனர்.

“பயிற்சியின்போது நீண்ட தூரத்திலிருந்து கோல்களை அடிப்பதை வழக்கமாக மேற்கொண்டு வந்தேன். அதற்குப் பலன் இருந்தது. 2-வது கோலை அவ்வளவு தொலைவிலிருந்து சரியாக அடிக்க முடியும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. நாங்கள் இறுதிப்போட்டியை அடைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது” என வர்காஸ் தெரிவித்துள்ளார்.

2-வது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டீனா அணியும் பராகுவே அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் சிலி இறுதிப் போட்டி யில் வரும் 4-ம் தேதி மோதவுள்ளது.

முன்னதாக, வரும் 3-ம் தேதி 3-வது இடத்துக்கான போட்டி நடைபெற வுள்ளது. அதில் பெரு அணியும், 2-வது அரையிறுதிப் போட்டியில் தோற்கும் அணியும் மோத வுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x