Published : 10 Oct 2019 04:59 PM
Last Updated : 10 Oct 2019 04:59 PM
பிரிஸ்பன்
ஆஸ்திரேலியாவின் வலுவான உள்நாட்டுத் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன, இதில் குவீன்ஸ்லாந்து, நியூசவுத் வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான 4 நாள் போட்டி வேகப்பந்து வீச்சு சாதக ஆட்டக்களமான பிரிஸ்பனில் வியாழனான இன்று தொடங்கியது.
இதில் ஆஷஸ் தொடரில் 774 ரன்கள் விளாசிய ஸ்மித்துக்கு இங்கிலாந்து பவுலர்கள் செய்ய முடியாததை குவீன்ஸ்லாந்து பவுலர் கேமரூன் கனான் செய்து காட்டினார்.
இதில் குவீன்ஸ்லாந்து அணி முதலில் பேட் செய்து முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசவுத்வேல்ஸ் அணி 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. குவீன்ஸ்லாந்து அணியில் டெஸ்ட் வீரர் லபுஷேன் மட்டுமே அதிகபட்சமாக 69 ரன்களை எடுத்தார். நியூசவுத்வேல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் கான்வே 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பிலிப் ஹியூஸுக்கு அந்த பவுன்சரை வீசிய ஷான் அபாட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நியூசவுத்வேல்ஸ் அணி அதன் பிறகு தன் இன்னிங்சைத் தொடங்க டேவிட் வார்னர் தொடக்கத்தில் களமிறங்கினார், இதே அணியில்தான் ஆஸி. நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆடுகிறார்.
இதில் 30 வயது குவீன்ஸ்லாந்து வலது கை வேகப்பந்து வீச்சாளர் கேமருன் கனான் என்ற பவுலர் மிக மிக அரிதான வகையில் ஸ்மித்தை பூஜ்ஜியத்தில் ஆட்டமிழக்கச் செய்து ஒரேநாளில் புகழடைந்துள்ளார்.
கடந்த 2018, ஜனவரிக்குப் பிறகு ஆஸ்திரேலிய உள்நாட்டுப் போட்டிகளில் ஆடாத ஸ்மித் இப்போதுதான் ஆடுகிறார். இதில் தான் எதிர்கொண்ட 5வது பந்தில் கேமரூன் கனான் பந்தை எட்ஜ் செய்து 2வது ஸ்லிப்பில் ஜோ பர்ன்ஸ் கேட்சுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார். கேமருன் கனான் 3 விக்கெட்டுகளையுமே கைப்பற்றினார்.
டேவிட் வார்னர் 27 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்கிறார். 54 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு, அதாவது 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்மித் முதல் தர கிரிக்கெட்டில் டக் அவுட் ஆகியுள்ளார்.
தனது இந்த ஸ்மித் டக் அவுட் சாதனை குறித்து கேமரூன் கனான் கூறுகையில், “மிகவும் விசித்திரமானதுதான், ஒரே இடத்தில் அவருக்குப் பந்துகளை வீசினேன். லெக் திசையில் விளாசுவதில் ஸ்மித் கில்லாடி, எனவே ஆஃப் திசையில் கொஞ்சம் வைடாக புல் லெந்தில் வீசினேன், கேட்ச் கொடுத்தார்” என்கிறார் பெருமிதத்துடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT