Last Updated : 09 Jul, 2015 02:32 PM

 

Published : 09 Jul 2015 02:32 PM
Last Updated : 09 Jul 2015 02:32 PM

விம்பிள்டன் அரையிறுதியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் இரட்டையர் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய-சுவிஸ் இணையான சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியது.

காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய-கஜகஸ்தான் ஜோடியான கேஸி டெல்லக்வா- யாரஸ்லாவா ஷ்வெடோவா ஜோடியை 7-5, 6-3 என்ற நெர் செட்களில் ஒரு மணி நேரம் 19 நிமிடங்களில் வீழ்த்தியது சானியா-ஹிங்கிஸ் ஜோடி.

2011 விம்பிள்டன் அரையிறுதியில் சானியா-எலெனா வெஸ்னின ஜோடி நுழைந்தது. அதன் பிறகு தற்போது மார்டினா ஹிங்கிஸுடன் விளையாடி அரையிறுதி கண்டுள்ளார் சானியா.

ஆக்ரோஷமாக ஆடியா சானியா-ஹிங்கிஸ் ஜோடி 27 முதல் சர்வில் 20-ஐ வெற்றியாக மாற்றினர். முதல் செட்டில் டெல்லக்வா-ஷ்வெடோவா ஜோடி சானியா-ஹிங்கிஸ் சர்வை முறியடித்தாலும் மீண்டும் சானியா-ஹிங்கிஸ் ஜோடி இருமுறை அவர்களது சர்வை முறியடித்து முதல் செட்டை 7-5 என்று கைப்பற்றினர்.

2-வது செட்டில் ஒரேயொரு எதிரணி சர்வை உடைத்த சானியா-ஹிங்கிஸ், அதன் பிறகு டெல்லக்வா-ஷ்வெடோவாவின் டபுள் ஃபால்ட்டினால் 2-வது செட்டை 6-3 என்று கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினர்

அரையிறுதியில் 5-ம் தரவரிசையில் உள்ள அமெரிக்க ஜோடியான ராகெல் காப்ஸ்-அபிகெய்ல் ஸ்பியர்ஸ் ஜோடியை எதிர்கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x