Published : 02 Oct 2019 09:32 AM
Last Updated : 02 Oct 2019 09:32 AM

டாஸ் வென்றார் விராட் கோலி: இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம்?

டாஸ் நிகழ்வில் தென் ஆப்பிரிக்க கேப்டன்டூப்பிளசிஸ், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி : படம் உதவி ட்விட்டர்

விசாகப்பட்டிணம்


விசாகப்பட்டிணத்தில் இன்று தொடங்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தநிலையில் டெஸ்ட் தொடர் விசாகப்பட்டிணத்தில் இன்று தொடங்குகிறது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்துக்கு பதிலாக விருத்திமான் சாஹா விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் தொடக்க வீரராக ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்குகின்றனர். டி20, ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதால் பெரிய எதிர்பார்ப்பு காத்திருக்கிறது. பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் சர்மா டக்அவுட்டில் வெளியேறியதால் இவரின் ஆட்டம் கவனிப்பு பெற்றுள்ளது.

ஒன்டவுனில் புஜாராவும், அடுத்தார்போல் கோலியும், ரஹானேயும், ஹனுமா விஹாரியும் களமிறங்குவார்கள். மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் புஜாரா சிறப்பாக விளையாடவில்லை, ஆனால், உள்நாட்டில் புஜாராவின் ஆட்டம் சிறப்பாக கடந்த காலங்களில் இருந்துள்ளதால், அவரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

நடுவரிசையில் விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின் களமிறங்குவார்கள். வேகப்பந்துவீச்சில் இசாந்த் சர்மா, முகமது ஷமி மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை எய்டன் மார்க்ரம், டீல் எல்கர், புருவன், டூப்பிளசிஸ், பவுமா, டீ காக், பிலாண்டர், செனுரன் முத்துசாமி, கேஷவ் மகராஜ், ரபாடா, டேன் பீடெய்ட் ஆகியோர் உள்ளனர்.
இதில் இடதுகை சுழற்பந்துவீச்சாளரான முத்துசாமி உள்நாட்டில் 129 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார், பகுதிநேர பேட்ஸ்மேனாகவும் இருப்பார், சுழற்பந்துவீச்சுக்கு கேசவ் மகராஜும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், அது இரு மூன்றாவது நாளில் இருந்துதான் மாற்றமாகும். விசாகப்பட்டணத்தில் மழைக்கான சூழலும், குளிர்ந்த காற்றும் வீசும்பட்சத்தில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகி வேகப்பந்துவீச்சுக்கு கைகொடுக்கும்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x