Published : 01 Sep 2019 10:24 AM
Last Updated : 01 Sep 2019 10:24 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச்

ஜோகோவிச்

நியூயார்க்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நோவக் ஜோகோவிச், ரோஜர் பெடரர், எலினா ஸ்விட் டோலினா, செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் 111-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவையும், 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-2, 6-2, 6-1 என்ற நேர் செட்டில் 58-ம் நிலை வீரரான இங்கிலாந்தில் டேன் இவான்ஸையும் வீழ்த்தினர். 7-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷி கோரி 2-6, 4-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் 38-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

5-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 7-6 (7-1), 4-6, 7-6 (9-7), 6-4 என்ற செட் கணக்கில் 61-ம் நிலை வீரரான ஸ்பெயினின் பெலிசியானோ லோபஸையும், 15-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபின் 7-6 (7-5), 7-6 (11-9), 7-5 என்ற செட் கணக்கில் 69-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கரேனோ பஸ்டாவையும், 23-ம் நிலை வீர ரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6-4, 7-6 (11-9), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் 135-ம் நிலை வீர ரான இத்தாலியின் பாவ்லோ லாரன் ஸியும் வீழ்த்தி 4-வது சுற்றில் கால் பதித்தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்தி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் 30-ம் நிலை வீராங்கனையான கிரீஸ் நாட்டின் மரியா சக்கரியையும், 3-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் 62-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஜாபூரையும், 5-ம் நிலை வீராங் கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-2, 6-0 என்ற நேர் செட்டில் 32-ம் நிலை வீராங் கனையான சகநாட்டைச் சேர்ந்த டயானா யஸ்த்ரெம்ஸ்காவையும் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன் னேறினர்.

செரீனா வெற்றி

இதேபோல் 8-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் செக் குடியரசின் 44-ம் நிலை வீராங்கனையான கரோலினா முச்சோவாவையும், 10-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கெய்ஸ் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் சகநாட்டைச் சேர்ந்த சோபியா கெனினையும், 16-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டா 6-2, 6-3 என்ற நேர் செட்டில் 33-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஜாங் ஷுவாயையும் தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x