Last Updated : 14 Jul, 2015 09:52 AM

 

Published : 14 Jul 2015 09:52 AM
Last Updated : 14 Jul 2015 09:52 AM

ஜூனியர் கிராண்ட்ஸ்லாமில் பட்டம் வென்றார் சுமித் நாகல்

சுமித் நாகல் நெகிழ்ச்சி

ஜூனியர் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல்-வியட்நாமின் நாம் ஹாங் லீ ஜோடி 7-6 (4), 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஓபேல்கா-ஜப்பானின் அகிரா சான்டிலன் ஜோடி யைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது. ஜூனியர் கிராண்ட்ஸ்லாமில் பட்டம் வென்ற 6-வது இந்தியர் சுமித் நாகல் ஆவார்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஜூனியர் பிரிவில் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற் றுள்ளார் நாகல். இதற்கு முன்னர் 2009-ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் ஜூனியர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.

ராமநாதன் கிருஷ்ணன் (விம்பிள்டன் 1954), ரமேஷ் கிருஷ்ணன் (பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் 1979), லியாண்டர் பயஸ் (விம்பிள்டன் 1990, அமெரிக்க ஓபன் 1991), சானியா மிர்சா (2009 விம்பிள்டன் இரட்டையர் பிரிவு) ஆகியோர் ஜூனியர் பிரிவு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்ற மற்ற இந்தியர்கள் ஆவர்.

வெற்றி குறித்துப் பேசிய 17 வயது நாகல், “விம்பிள்டனில் பட்டம் வென்றிருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மிகப்பெரிய மற்றும் மிகப்பழமையான விம்பிள்டன் போட்டியில் சாம்பியனாகியிருப்பது மிகச்சிறப்பானதாகும். விம்பிள்ட னில் சாம்பியன் ஆவேன் என கற்பனையிலும் நினைத்ததில்லை” என்றார்.

பயஸ், நாகலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற லியாண்டர் பயஸ், ஜூனியர் ஆடவர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற சுமித் நாகல் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித் துள்ளார்.

அதில், “விம்பிள்டனில் இருந்து மேலும் நல்ல செய்திகள் வந்துள்ளன. பயஸ் உங்களின் அளப்பரிய சாதனை அனைவரையும் சாதிக்க தூண்டுகிறது. உங்களின் சாதனை எங்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்திருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். சுமித் நாகலை வெகுவாகப் பாராட்டியுள்ள மோடி, “இளம் வீரராகிய நாகல் விம்பிள்ட னில் சாம்பியனாகியிருப்பதைப் பார்க்கும்போது அது மிகுந்த நம்பிக் கையை அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் பாராட்டு

விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் லியாண்டர் பயஸ், சானியா மிர்சா, சுமித் நாகல் ஆகியோருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “வாழ்த்துகள் பயஸ். இளம் வீரர்களுக்கு உத்வேகமிக்க முன்மாதிரியாக நீங்கள் இருக்கிறீர்கள். சானியா-ஹிங்கிஸ் நீங்கள் இருவரும் அற்புதமான ஆட்டத்தை ஆடியிருக்கிறீர்கள். இன்னும் நிறைய போட்டிகளில் வெல்வீர்கள். நீங்கள் எங்களை பெருமைப்பட வைத்திருக்கிறீர்கள்” என குறிப்பிட்டுள்ளார். சுமித்துக்கு பாராட்டு தெரிவித்துள்ள அவர், “இது ஆரம்பம்தான். கடுமையாக உழையுங்கள். உங்களின் கனவை பின் தொடருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x