Published : 31 May 2014 04:51 PM
Last Updated : 31 May 2014 04:51 PM
நெதர்லாந்தில் இன்று துவங்கிய உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரின் முதல் போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
தி ஹேக்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசியாவை 4- 0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.
முதல் பாதியில் கிளென் டர்னர் முதல் கோலை அடித்து ஆஸ்திரேலியாவுக்கு முன்னிலை அளித்தார்.
இடைவேளைக்குப் பிறகு ஆக்ரோஷம் காட்டிய ஆஸ்திரேலியா 4 நிமிடங்களில் 3 கோல்களைத் திணித்தது.
ஆஸ்திரேலிய வீரர்கள் எடி ஆக்கெண்டென், ஜேமி ட்வையர், மீண்டும் டர்னர் ஆகியோர் கோல்களை அடித்தனர்.
இன்று இரவு 7.30 மணிக்கு இந்தியா, பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. இரவு 9 மணிக்கு இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT