Published : 08 Jul 2015 09:29 AM
Last Updated : 08 Jul 2015 09:29 AM
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி யில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஷரபோவா 6-3, 6-7(3), 6-2 என்ற செட்களில் அமெரிக்காவின் கோகோ வந்தேவேகேவை தோற்கடித்தார்.
ஆடவர் ஒற்றையர் 4-வது சுற்றில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கடும் போராட்டத்துக்குப் பிறகு 6-7 (6), 6-7 (6), 6-1, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 25-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஜோகோவிச், அடுத்ததாக குரேஷியாவின் மரின் சிலிச்சை சந்திக்கவுள்ளார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் நியூஸிலாந்தின் ஆர்டெம் சிடாக்-ஆஸ்திரேலியாவின் அனாஸ்டாஸியா ஜோடியைத் தோற்கடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT