Published : 21 Jul 2015 09:23 PM
Last Updated : 21 Jul 2015 09:23 PM

கடற்கரையில் படுத்துக் கிடக்கிறேன்: கெவின் பீட்டர்சன் கடும் சோகம்

இங்கிலாந்தினால் புறக்கணிக்கப்பட்ட கெவின் பீட்டர்சன், மியாமி கடற்கரையிலிருந்து சோகத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அணி தத்தளிக்கும் போதும் தன்னை புறக்கணிப்பது குறித்து கோபாவேசத்துடனும், சோகத்துடனும், ட்வீட்களைச் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

எப்போதையும் விட சிறப்பாக பேட் செய்து வருகிறேன். இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பெரும் சிக்கலில் இருக்கிறது. என்ன ஒரு விரயம்?! கடற்கரையில் படுத்துக் கிடக்கிறேன். நான் இங்கிலாந்து அணிக்கு உதவ முடியும், உதவ விரும்புகிறேன் என்று ஒரு ட்வீட் பதிவும்,

இப்போது ஆழ்சிந்தனையில் இருக்கிறேன்... 3-வது டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்தில் தயார் செய்ய வேண்டிய நான் கடற்கரையில் படுத்துக் கிடப்பது நகைக்கத் தக்கதாக உள்ளது. உண்மையில் இது முட்டாள்தனமாகவும் சிறுமைத் தனமாகவும் இருக்கிறது, வருத்தமளிக்கிறது. என்று இன்னொரு ட்வீட் பதிவும் இட்டு தனது சொந்தக் கதை சோகக்கதையை வெளிப்படுத்தி வருகிறார்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் 103 ரன்களுக்குச் சுருண்டு பலரது கோபாவேசத்துக்கு ஆளாகியுள்ள இங்கிலாந்து அணியில் ஆடம் லித், கேரி பேலன்ஸ், இயன் பெல் என்று டாப் ஆர்டர் கடுமையாகத் திணறி வருகிறது இந்நிலையில் பேர்ஸ்டோவை அணிக்கு அழைத்துள்ளது இங்கிலாந்து.

கெவின் பீட்டர்சன் நடத்தை நம்பகத்தன்மை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநரான முன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் கேள்வி எழுப்பி அவர் அணிக்கு வர வாய்ப்பேயில்லை என்று நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x