Published : 06 Jun 2015 09:39 AM
Last Updated : 06 Jun 2015 09:39 AM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டா னிஸ்லஸ் வாவ்ரிங்கா இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி யில் நேற்று நடைபெற்ற அரை யிறுதியில் வாவ்ரிங்கா 6-3, 6-7 (1), 7-6 (3), 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜோ வில் பிரைட் சோங்காவை வீழ்த்தினார்.
2014 ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான வாவ்ரிங்கா, பிரெஞ்சு ஓபனில் முதல்முறை யாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறி யிருக்கிறார். வெற்றி குறித்துப் பேசிய வாவ்ரிங்கா, “இந்த ஆட்டம் மிகப்பெரிய போராட்டம். உடல் அளவிலும் இது மிகக்கடினமான போட்டி. இதில் வெல்ல வேண்டும் என்பதில் இருவருமே தீவிரமாக இருந்தோம்.
3-வது செட்டில் எனது சர்வீஸை முறியடித்து அதை கைப்பற்றும் வாய்ப்பு சோங் காவுக்கு கிடைத்தது. எனினும் நான் விடவில்லை. இந்தத் தொடரில் அவர் மிகச்சிறப்பாக ஆடினார். என்னைப் போலவே அவரும் இறுதிச்சுற்றில் விளையாடுவதற்கு தகுதியானவர்” என்றார்.
பிரெஞ்சு ஓபனில் கடந்த 32 ஆண்டுகளாக பிரான்ஸ் வீரர் கள் யாரும் சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இந்த முறை நெருங்கி வந்த சோங்கா, அரை யிறுதியோடு வெளியேறியிருக் கிறார். 1983-ம் ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த யானிக் நோ சாம்பியன் பட்டம் வென்றார். 1998-ல் பிரான் ஸின் ஹென்றி லெகோன்ட் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அதன்பிறகு பிரான்ஸ் வீரர்கள் யாரும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி யதில்லை.
பிரையன்-சேன்ட்ஸ் ஜோடி சாம்பியன்
கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மைக் பிரையன்-பெத்தானி மடேக் சேன்ட்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் 7-6 (3), 6-1 என்ற நேர் செட் களில் போலந்தின் மார்சின் மட்கோவ்ஸ்கி-செக்.குடியரசின் லூஸி ரடேக்கா ஜோடியை தோற் கடித்தது. கிராண்ட்ஸ்லாம் போட்டி யின் கலப்பு இரட்டையர் பிரிவில் மைக் பிரையன் வென்ற 4-வது பட்டம் இதுவாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT