Published : 16 Jun 2015 03:01 PM
Last Updated : 16 Jun 2015 03:01 PM
திறமைகளை வளர்த்தெடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் பழக்கத்தை இந்தியாவிடமிருந்து ஆஸ்திரேலியா கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார்.
மிட் டே பத்திரிகையில் அவர் எழுதியுள்ள பத்தியில் இது குறித்து கூறியிருப்பதாவது:
முன்பு ஆஸ்திரேலியாவில் இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்து அவர்கள் சிறப்பாக விளையாடி ஜொலிப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்தக் கொள்கையை தற்போது ஆஸ்திரேலிய அணி தேர்வுக்குழு கடைபிடிப்பதில்லை.
மார்கஸ் நார்த், எட் கோவன், ராப் குயினி, ஜார்ஜ் பெய்லி, கிறிஸ் ராஜர்ஸ், அலெக்ஸ் தூலன், தற்போது ஆடம் வோஜஸ் என்று பழைய வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் எதிர்மறையாக எதுவும் ஆகிவிடவில்லை என்றாலும் இந்தப் போக்கை சற்று நிதானித்து கவனிப்பது நல்லது.
இந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவைத் தவிர வேறு எந்த அணியும் புதுமுகங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. குறிப்பாக சச்சின், ராகுல் திராவிட், கங்குலி, லஷ்மண், சேவாக் ஆகிய பெரிய வீரர்களுக்கு மாற்றாக அடுத்தடுத்து இளம் வீரர்களை தேர்வு செய்தனர். ஆனால் வலுவான பேட்டிங் வரிசையை விட்டுக் கொடுக்காமல் இளம் வீரர்களை தேர்வு செய்து அவர்களும் தற்போது ஜொலிக்கின்றனர்.
இளம் வீரர்களை இந்தியா தொடர்ந்து உற்பத்தி செய்வது கிரிக்கெட்டின் விலைமதிப்பில்லாத தங்கம் போன்றது.
சிறந்த அணிகள் எல்லாமே அனுபவத்துடன், இளம் திறமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளதுதான். இந்த விதத்தில் இந்திய அணி கடைபிடிக்கும் கொள்கையை ஆஸ்திரேலியாவும் கடைபிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT