Published : 17 Jun 2015 10:01 AM
Last Updated : 17 Jun 2015 10:01 AM
ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி யின் முதல் சுற்றில் ஸ்விட்சர்லாந் தின் ரோஜர் ஃபெடரர் கடும் போராட்டத்துக்குப் பிறகு வெற்றி கண்டார்.
ஜெர்மனியின் ஹாலேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி யில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஃபெடரர் 7-6 (8), 3-6, 7-6 (5) என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் பிலிப் ஹோல்ஸ் கிரைபரைத் தோற்கடித்தார்.
2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஃபெடரர் வென்ற இரு செட்களும் டைபிரேக்கர் வரை சென்றது. ஆனால் ஹோல்ஸ்கிரைபர் 2-வது செட்டை மிக எளிதாக 6-3 என்ற கணக்கில் வென்றார்.
ஒரு கட்டத்தில் ஹோல்ஸ்கிரைபரின் அதிவேக ஷாட்களை எதிர்கொள்ள முடியாமல் ஃபெடரர் தடுமாறியது குறிப்பிடத்தக்கது.
ஹாலே போட்டியில் கடந்த 9 ஆண்டுகளாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் ஃபெடரர், இந்த முறை 8-வது சாம்பியன் பட்டத்தை வெல்வதில் தீவிரமாக இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT