Published : 06 May 2015 09:50 AM
Last Updated : 06 May 2015 09:50 AM
மாட்ரிட்ஓபன் டென்னிஸ் போட்டி யில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், டென்மார்க்கின் வோஸ்னியாக்கி உள்ளிட்டோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியு ள்ளனர்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் 6-4, 6-0 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான ஸ்லோனே ஸ்டீபன்ஸைத் தோற்கடித்தார். இதன் மூலம் இந்த சீசனில் ஓர் ஆட்டத்தில்கூட தோற்காத செரீனா, தொடர்ச் சியாக 22 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். இதுதவிர 2010-லிருந்து மாட்ரிட் ஓபனில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறார் செரீனா.
செரீனா வில்லியம்ஸ், இன்று நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா அல்லது அஜ்லா டாம்ஜனோச்சை சந்திப்பார்.
வெற்றி குறித்துப் பேசிய செரீனா வில்லியம்ஸ், “ஸ்லோனே அபாரமாக ஆடக்கூடியவர். அவருக்கு எதிராக இப்போதுதான் 6-0 என்ற கணக்கில் ஒரு செட்டை கைப்பற்றியிருக்கிறேன். ஆனால் இதேபோன்று அவருக்கு எதிராக மற்றொரு முறை வெற்றி பெற முடியும் என நினைக்கவில்லை” என்றார்.
வோஸ்னியாக்கி வெற்றி
மற்றொரு 2-வது சுற்றில் டென்மார்க்கின் வோஸ்னியாக்கி 7-5, 6-0 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் தகுதிநிலை வீராங்கனையான கிறிஸ்டினா மிக்கேலை தோற்கடித்தார். வோஸ்னியாக்கி தனது 3-வது சுற்றில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை சந்திக்கிறார்.
அக்னீஸ்கா தனது 2-வது சுற்றில் 6-2, 6-1 என்ற நேர்செட் களில் ஆஸ்திரேலியாவின் கேஸி டெலக்காவை தோற்கடித்தார். இவர்கள் இருவரும் இதுவரை 11 முறை மோதியுள்ளனர். அதில் வோஸ்னியாக்கி 7 முறையும், அக்னீஸ்கா 4 முறையும் வெற்றி கண்டுள்ளனர். எனினும் திறந்த வெளி (அவுட்டோர்) களிமண் ஆடுகளத்தில் இவர்கள் இரு வரும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
3வது சுற்றில் சமந்தா
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆஸ்திரேலி யாவின் சமந்தா ஸ்டோசரும், ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவும் மோது கின்றனர். குஸ்நெட்சோவா 6-3, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கேபிரின் முகுருஸாவையும், சமந்தா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எஸ்தோனியாவின் கயா கனேபி யையும் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னே றினர்.
2-வது சுற்றில் போபண்ணா ஜோடி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ருமேனியாவின் ஃபுளோரின் மெர்கியா ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த ஜோடி தங்களின் முதல் சுற்றில் 5-7, 7-6 (5), 10-6 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் மரின் டிராகன்ஜா-பின்லாந்தின் ஹென்றி கான்டினென் ஜோடியைத் தோற்கடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT