Published : 19 May 2015 05:21 PM
Last Updated : 19 May 2015 05:21 PM
பாகிஸ்தான் மைதானங்களுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் வந்துள்ளது. ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் வந்திறங்கியுள்ளது.
அந்த அணிக்கு எதிரான பாகிஸ்தான் டி20 அணியில் வேகப்பந்து வீச்சாளர் மொகமது சமி மற்றும் ஆல் ரவுண்டர் ஷோயப் மாலிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் நீக்கப்பட்ட உமர் அக்மல் மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2 டி20 போட்டிகள் நடைபெறுகிறது. மேலும் இதுவரை விளையாடாத 2 புதுமுகங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்மத் வாசிம், நோமான் அன்வர் ஆகிய புதுமுகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் நடைபெறுகிறது. 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது ஜிம்பாப்வே. அனைத்துப் போட்டிகளும் லாகூரில் நடைபெறுகிறது.
மே 22-இல் முதல் டி20, மே 24-ம் தேதி 2-வது டி 20 போட்டிகள் நடைபெறுகின்றன. மே 26, 29, 31 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன.
டி20 அணி வருமாறு: ஷாகித் அப்ரீடி (கேப்டன்), சர்பராஸ் அகமது, அகமது ஷெசாத், ஹபீஸ், முக்தர் அகமது, நோமன் அன்வர், ஷோயப் மாலிக், உமர் அக்மல், மொகமது ரிஸ்வான், அன்வர் அலி, ஹமத் ஆசம், இம்மத் வாசிம், பிலாவல் பட்டி, வஹாப் ரியாஸ், மொகமது சமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT