Published : 16 May 2015 09:56 AM
Last Updated : 16 May 2015 09:56 AM
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஸ்பெயினின் டேவிட் ஃபெரர்.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் டேவிட் ஃபெரர் 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் பெல்ஜிய வீரர் டேவிட் கோஃபினை தோற்கடித்தார்.
இந்தப் போட்டியின் 2-வது சுற்றில் பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்த டேவிட் கோஃபின், அடுத்த சுற்றில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை எதிர்த்து விளையாடவிருந்தார். ஆனால் முர்ரே களைப்பு காரண மாக போட்டியிலிருந்து விலகிய தைத் தொடர்ந்து, காலிறுதிக்கு முன்னேறிய டேவிட் கோஃபின் இப்போது ஃபெரரிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறி யுள்ளார்.
காலிறுதியில் டேவிட் ஃபெரருக்கு ஓரளவு சவால் அளித்த கோஃபின் 2-வது செட்டை கைப்பற்றியபோதிலும், 3-வது செட்டில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் தோல்வி கண்டார். 2010-ல் ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ள ஃபெரர், ஒருமுறைகூட ரோம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை.
டேவிட் ஃபெரர் தனது அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அல்லது ஜப்பானின் கெய் நிஷகோரியை சந்திக்க வாய்ப்புள்ளது.
காலிறுதியில் ஷரபோவா
ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா ஆகியோர் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
உலகின் முதல் நிலை வீராங் கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டி யிலிருந்து விலகினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT