Published : 06 Apr 2015 09:44 AM
Last Updated : 06 Apr 2015 09:44 AM
கனடாவை நொறுக்கியது ஆஸ்திரேலியா
அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் மிகப்பரபரப்பாக நடை பெற்ற இந்தியா- தென் கொரியா போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. முன்னதாக நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா கனடாவை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
6 நாடுகள் பங்கேற்றுள்ள 24-வது அஸ்லன் ஷா ஹாக்கி தொடர் மலேசியாவின் ஈபோ நகரில் நேற்று தொடங்கியது.
இந்தியா- தென்கொரியா
2-வது ஆட்டத்தில் ஆசிய சாம்பியனான இந்தியாவும் தென் கொரியாவும் மோதின. இந்திய அணியின் பயிற்சியாளரான நெதர் லாந்தின் பால் வான் அஸ்ஸின் பயிற்சியின் கீழ் இந்தியா பங்கேற்ற முதல் போட்டி இதுவாகும்.
ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தைக் கையாண்டனர். இந்தியாவின் நிகின் திம்மையா முதல் தாக்குதலைத் தொடுத்தார் ஆனால் அதனைக் கோலாக மாற்ற முடியவில்லை. ஆனால் அவரின் அடுத்த தாக்குதலுக்குப் பலன் இருந்தது. 10-வது நிமிடத்தில் நிகின் திம்மையா இந்தியாவுக்கான முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் முதல் 15 நிமிடம் முழுக்க இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அதன்பின், இந்தியாவின் தரம் வீர் அற்புதமாக பந்தைக் கடத்தி ரமண் தீப்புக்குக் கொடுத்தார். ஆனால் ரமண்தீப்பின் தாக்கு தலை தென் கொரிய கோல் கீப்பர் தடுத்து விட்டார். கோல் கீப்பரிடமிருந்து திரும்பி வந்த பந்தை சத்பிர் கோலாக்க முயற்சி செய்தார். அம்முயற்சி தோல்வி யில் முடிந்தது.
ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் தென் கொரியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை தென் கொரியாவின் ஹீசங் ஹியூன் கோலாக மாற்றினார். 27-வது நிமிடத்தில் தென் கொரி யாவுக்கு ஃபிரீ ஹிட் கிடைத்தது. இருப்பினும் அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.
கொரியா முன்னிலை
இரண்டாவது பாதி தொடங்கி யதும் தென் கொரியா அடுத்தடுத்து இரு தாக்குதல்களைத் தொடுத்தது. ஆனால், இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அவற்றை அபாரமாகத் தடுத்துவிட்டார்.
ஆட்டம் முடிய சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் 51-வது நிமிடத்தில் தென் கொரியாவின் சியுங்கூன் லி அற்புதமாக கோல் அடிக்க தென் கொரியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ஏறக்குறைய தென் கொரியா வென்று விடும் நிலையில் இருந் தது. ஆனால், இந்திய வீரர்கள் தீரத்துடன் போராட, 56-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ரகுநாத் அதனை கோலாக மாற்ற 2-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சமன் செய்தது இந்தியா.
ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்று விட்ட நிலையில், அஸ்லன் ஷா தொடரை ஒலிம்பிக் போட்டிக்கான தயாரிப்புத் தொடராகவே இந்தியா கருதுகிறது. மேலும் பலம் வாய்ந்த தென் கொரியா வுடனான ஆட்டத்தை சமனில் முடித்ததன் மூலம் இந்தியா வின் தன்னம்பிக்கை அதிகரித்தி ருக்கிறது. இது அடுத்து வரும் போட்டிகளிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியா தனது இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்தை இன்று சந்திக் கிறது.
ஆஸ்திரேலியா அபாரம்
முதல் ஆட்டத்தில் நடப்பு சாம் பியன் ஆஸ்திரேலியாவை கனடா எதிர்கொண்டது. ஆட்டத்தை முழுக்க முழுக்க தனது கட்டுப் பாட்டில் எடுத்துக் கொண்ட ஆஸ்தி ரேலியா 7-0 என்ற கோல்கணக்கில் கனடாவை நொறுக்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT