Last Updated : 15 Apr, 2015 10:47 AM

 

Published : 15 Apr 2015 10:47 AM
Last Updated : 15 Apr 2015 10:47 AM

மில்னி, ஸ்டார்க் வருகை பந்துவீச்சில் பலம் சேர்க்கும்: விராட் கோலி நம்பிக்கை

ஆடம் மில்னி, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தங்களுடைய காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பும்பட்சத்தில் அது எங்கள் அணியின் பந்துவீச்சுக்கு பெரும் பலம் சேர்ப்பதாக அமையும் என பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸிடம் தோல்வி கண்டது ராயல் சேலஞ்சர்ஸ். அந்த போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி மேலும் கூறியதாவது:

பவுலர்கள் உச்சகட்ட பார்முக்கு வருவதற்கு அவர்களுக்கு காலஅவகாசம் தேவை. அதை நாம் கொடுக்க வேண்டும். வருண் ஆரோன், அபு நெசிம் போன்றோர் சிறப்பாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள். அதற்கு அவர்கள் பார்முக்கு வரவேண்டும்.

ஆடம் மில்னி காயத்திலிருந்து மீண்டுவிட்டதால் அவர் 100 சதவீத உடற்தகுதியை பெற்றுவிட்டதாக நம்புகிறேன். அவர் அடுத்த ஆட்டத்திலிருந்து அணியில் இடம்பெறுவார் என நினைக்கிறேன். அவர் இடம்பெறும்பட்சத்தில் எங்கள் அணியின் பந்துவீச்சு பலம் பெறும். மிட்செல் ஸ்டார்க்கும் அணியில் இணையும்போது முழு பலம் பொருந்தியதாக அணி மாறிவிடும்.

ஆனால் அதுவரை இருக்கிற பவுலர்களை வைத்து விக்கெட்டு களை கைப்பற்ற வேண்டும். சரியான இடத்தில் துல்லிய மாக பந்துவீசுவது அவசியம். சன்ரைஸர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் எங்கள் பவுலர் களால் துல்லியமாக பந்துவீச முடியவில்லை. பேட்டிங்கை பொறுத்தவரையில் பேட்ஸ் மேன்கள் வரிசையில் மாற்றம் செய்வதா அல்லது பத்ரிநாத் போன்ற அனுபவ வீரர்களை களமிறக்குவதா என்பது குறித்து ஆராய்வது மிக அவசியமானது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x