Published : 15 Apr 2015 10:58 AM
Last Updated : 15 Apr 2015 10:58 AM
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கண்டதற்கு டிரென்ட் போல்ட், புவனேஸ்வர் குமார் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சே காரணம் என சன்ரைஸர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் பாராட்டியுள்ளார்.
பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைஸர்ஸ். அந்த அணியின் தரப்பில் டிரென்ட் போல்ட் 4 ஓவர்களில் 36 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 3.5 ஓவர் களில் 30 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். எனினும் 27 பந்துகளில் 57 ரன்கள் குவித்த வார்னரே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப் பட்டார்.
பின்னர் வெற்றி குறித்துப் பேசிய வார்னர், “என்னெவொரு அற்புதமாக பந்துவீசினர் எங்கள் பவுலர்கள். பந்துகள் அற்புதமாக சுழன்றன. பவுலர்கள் அதை சிறப்பாக செய்தனர். போல்ட், புவனேஸ்வர் குமார் ஆகியோ ரின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருந்தது. இதேபோல் எங்களு டைய பீல்டிங்கை நினைத்து பெருமை கொள்கிறோம். ஒரு போட்டியில் 50 சதவீதம் பீல்டிங்கை சார்ந்ததாகும்.
சரியாக பீல்டிங் செய்து விட்டால் பேட்டிங்கும், பவுலிங் கும் அதுவாகவே நன்றாக அமைந்துவிடும். அனைத்து பாராட்டுகளும் பவுலர்களுக் குத்தான். அவர்கள்தான் எளிதான இலக்கை அமைத்து கொடுத்தார்கள்” என்றார்.
தன்னுடன் தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவனை பாராட்டிய வார்னர், “தவன் அற்புதமாக ரன் சேர்த்ததால் நான் எவ்வித நெருக்கடியுமின்றி விளையாடினேன். நாங்கள் இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம். அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் விளையாட தயாராக உள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT