Published : 15 May 2014 12:20 PM
Last Updated : 15 May 2014 12:20 PM

சென்னை அணி விடுதியில் தங்கினாரா சீனிவாசன்?- கவாஸ்கருக்கு ஆதித்ய வர்மா கேள்வி

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல். சூதாட்ட விசாரணைகளில் முக்கிய மனுதாரரான ஆதித்ய வர்மா, மே 13ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ராஞ்சியில் விளையாடிய அன்று, பிசிசிஐ தலைவர் சீனிவாசன் ராஞ்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கிய விடுதியில் தங்கினாரா என்று சுனில் கவாஸ்கரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐபிஎல். விவகாரங்களில் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் தலையிடக்கூடாது என்ற கோர்ட் உத்தரவு இருக்கும்போது, இடைக்கால தலைவராக இருக்கும் சுனில் கவாஸ்கருக்கு இந்த விவகாரம் தெரியுமா என்று ஆதித்ய வர்மா மின்னஞ்சலில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த மின்னஞ்சலில் அவர் கூறியிருப்பதாவது:

"இது மிகவும் சீரியசான விஷயம், இந்த விவகாரம் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியுமா? உங்களுக்குத் தெரியவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுத்துள்ளீர்களா?" என்று சுனில் கவாஸ்கருக்கு ஆதித்ய வர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

"சீனிவாசன் அவ்வாறு அணி தங்கிய விடுதியில் தங்கியிருந்தாலோ, வீரர்களை சந்தித்திருந்தாலோ அது நீதிமன்ற உத்தரவுகளை மீறிய செயல் ஆகும் என்றும், அவர் சொந்த விவகாரமாக ராஞ்சி வந்திருந்தாலும் அது சென்னை அணி ஆடும் போட்டியன்று ஏன் அது கூட்டுச் சந்தர்ப்பம் கொண்டது. அப்படியிருந்தாலும் அவர் அணியிடமிருந்து விலகித்தானே இருக்கவேண்டும், ஒரே விடுதியில் ஒரே ஃப்ளோரில் தங்கியிருந்தால்?" என்று ஆதித்ய வர்மா சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஆகவே இது நடந்திருக்குமேயானால் அது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறிய செயல் ஆகும் என்று அவர் கவாஸ்கருக்கு மின்னஞ்சல் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x