Last Updated : 01 Apr, 2015 03:57 PM

 

Published : 01 Apr 2015 03:57 PM
Last Updated : 01 Apr 2015 03:57 PM

மலேசிய ஓபன் பேட்மிண்டன் 2-வது சுற்றில் இந்திய சாம்பியன் ஸ்ரீகாந்த்

இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸில் புதிய சாம்பியனாக எழுச்சி பெற்ற இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ராஜிவ் அவுசெப் 10-21, 21-15, 22-24 என்ற செட்களில் ஸ்ரீகாந்தினால் வீழ்த்தப்பட்டார்.

அடுத்த சுற்றில் தரவரிசை 16-ம் நிலையில் உள்ள சீனாவின் தியான் ஹூவேய் என்பவரைச் சந்திக்கிறார் ஸ்ரீகாந்த்.

முதல் சுற்றின் முதல் செட்டில் ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக 10 புள்ளிகளைப் பெற்றார். பிறகு செட்டைக் கைப்பற்றினார்.

2-வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீகாந்த் 6-0 என்ற முன்னிலையைலிருந்து ஆட்டத்தை தவறவிட்டார். அதன் பிறகு ராஜிவ் அற்புதமான ஆக்ரோஷம் காட்டி 13-12 என்று முன்னிலை பெற்று 2-வது செட்டைக் கைப்பற்றினார்.

3-வது செட்டிலும் 3-7 என்று பின் தங்கியிருந்த ஸ்ரீகாந்த் தனது போராட்டக்குணத்தினால் வெற்றி பெற்று ராஜிவ் அவுசெப்பை வெளியேற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x