Published : 02 Apr 2015 10:25 AM
Last Updated : 02 Apr 2015 10:25 AM
தமிழக அரசின் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் 2015-16-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த விடுதிகளில் ஆண், பெண் என இரு பாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதிகள் உள்ளன.
ஆடவர் பிரிவில் தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, வாலிபால், டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளுக்கும், மகளிர் பிரிவில் தடகளம், கால்பந்து, வாலிபால் ஆகிய விளையாட்டுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. 12-ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேரவிருக்கும் மாணவ, மாணவியர் மட்டுமே இந்த விடுதிகளில் சேர தகுதியுடையவர்கள்.
இது தொடர்பான மேலும் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளத்தின் ( >www.sdat.tn.gov.in) மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளத்திலேயே விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதேபோல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலங்களிலும் விண்ணப்பம் கிடைக்கிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ.10. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.4.2015.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மேலாளர், முதன்மை நிலை விளையாட்டு மையம், எண். 76, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை-600003.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் சம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT